News April 11, 2024

மீண்டும் வருகிறது அரசின் பொது விடுமுறை

image

இன்றைய ரம்ஜான் பொது விடுமுறையைத் தொடர்ந்து அடுத்த விடுமுறை எப்போது என்ற கேள்வி மக்களின் மனதில் எழத் தொடங்கியிருக்கிறது. உங்களுக்காகவே வருகிறது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு பொது விடுமுறை. அன்றைய தினம் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட எதுவும் செயல்படாது. அதனையடுத்து மே 1ஆம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்படவுள்ளது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.

News April 11, 2024

களநிலவரத்தை நேரில் அலசும் சபரீசன்!

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கள நிலவரத்தை நேரில் அலசி வருகிறார். முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டுள்ள அவர், தேர்தல் வேலைகள், கூட்டணி கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறாராம். தொடர்ந்து பிற பகுதிகளுக்கும் சென்று கள நிலவரத்தை சபரீசன் நேரில் ஆராய திட்டமிட்டுள்ளார்.

News April 11, 2024

சீனாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை

image

சீனாவில் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை, ஓய்வூதியப் பங்கீடு அந்நாட்டின் வளர்ச்சியை அச்சுறுத்தும் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், இப்போது அங்கு ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இது எதிர்காலத்தில், உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவின் மனித வளச் சமநிலையை சீர்குலைத்து அச்சுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

News April 11, 2024

தமிழ்நாடு காணும் பாஜகவின் புது வகை பிரசாரம்

image

பாஜக தலைவர்கள் வடமாநிலங்களில் பிரமாண்ட வாகனப் பேரணி நடத்துவது போல தமிழகத்திலும் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோரின் நடை பயணம், பொதுக் கூட்டங்களை மட்டுமே பார்த்துள்ளது. பாஜகவினரின் வாகன பேரணியை இப்போது தான் பார்க்கிறது. இந்தப் பேரணி, பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தருமா எனத் தேர்தல் முடிவே தீர்மானிக்கும்.

News April 11, 2024

நாளை கடைசி: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இணையதளம்: <>https://secr.indianrailways.gov.in/<<>>

News April 11, 2024

பூத் ஏஜெண்ட்டுக்கு கூட ஆளில்லையா?

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரத்தின் கள நிலவரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அத் தொகுதிக்குள் அவருக்காக வேலை பார்க்க ஆட்களே இல்லையாம். வெளியூர் ஆட்களெல்லாம் தொகுதியை விட்டு வெளியேறினால், அங்குள்ள 1,940 பூத்துகளுக்கு யாரை ஏஜெண்டாகப் போடுவார் என தெரியவில்லை. ஏஜெண்ட்டுகள் இல்லாமல் வாக்குகளை பெறுவது சிரமம் என்று பலரும் கூறுகின்றனர்.

News April 11, 2024

பல்வேறு அமைப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு

image

தேனி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பல்வேறு அமைப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத் தலைவர் பீட்டர் உட்பட பல்வேறு அமைப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக வணிகர் சங்கங்கள் பேரமைப்பும் ஆதரவு தெரிவித்திருந்தது.

News April 11, 2024

தேர்தல் வாக்குப்பதிவை பாதிக்குமா வெயில்?

image

இந்தியாவின் வெப்பமான நாள்கள் தொடங்கியிருக்கும் நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு விகிதத்தை வெயில் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வழக்கமாக வெயில் காலங்களில்தான் தேர்தல் நடக்கும் என்றாலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 11, 2024

ஆன்லைன் விளம்பரத்திற்கு ₹8.12 கோடி செலவிட்ட காங்கிரஸ்

image

கூகுள் மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு காங்கிரஸ் கட்சி ₹8.12 கோடி செலவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூகுள் புள்ளியியல் மையத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 736 ஆன்லைன் விளம்பரங்களுக்கு காங்கிரஸ் ₹8.12 கோடி செலவிட்டுள்ளதாகவும், மகாராஷ்டிராவில் மட்டும் ₹2.32 கோடி செலவிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

முகத்தை பொலிவாக காட்ட விரும்புபவரா நீங்கள்?

image

முகத்தை பொலிவாக காட்ட பவுண்டேஷன் மிகவும் அவசியம். அதிலும் நேர்த்தி குறைவான சருமம் இருந்தால் பவுண்டேஷன் மிகவும் அவசியமாகிறது. வெளியே செல்லும் போது வியர்வை, ஈரப்பதம் பவுண்டேஷனை பாதிக்காமல் இருக்க பவுடர் கொண்டு டச்சப் செய்ய வேண்டும். கண் இமைகள் புத்துணர்ச்சியாக இருக்க மஸ்காரா பயன்படுத்தலாம். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை பிடித்த வண்ணத்தில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

error: Content is protected !!