News May 16, 2024

INDIA கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது

image

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் INDIA கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக தனது பொய் தொழிற்சாலை மூலம் எவ்வளவு ஆறுதல்களை சொல்லிக்கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அவர், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்றார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திலேயே பாஜக இந்த தேர்தலை எதிர்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

News May 16, 2024

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

image

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2009இல் அமைச்சராக இருந்த போது வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

சுரங்கத்தில் சிக்கிய 14 விஜிலென்ஸ் அதிகாரிகள் மீட்பு

image

ராஜஸ்தானில் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். சுரங்கத்தை ஆய்வு செய்ய சென்ற விஜிலென்ஸ் அதிகாரிகள் லிப்டில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, பல அடி ஆழம் கொண்ட சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்டும் முயற்சி பல மணி நேரமாக நடைபெற்ற நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒரு அதிகாரி சுரங்த்திற்குள்ளேயே பலியானார்.

News May 16, 2024

ராஜஸ்தானுக்கு பயத்தை காட்டிய சாம் கரன்

image

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய சாம் கரன் ஆட்டநாயகனாக தேர்வானார். சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தான் அணியின் 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்திய அவர், பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பினார். பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்த அவுட்டான நிலையிலும், நங்கூரம் போல நின்று, 63 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

விரிவாக்கம் செய்யப்படும் சென்னை மாநகராட்சி

image

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை இணைக்க முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகள், 15 மண்டலங்களாக சென்னை மாநகராட்சி தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக உயருகிறது.

News May 16, 2024

பிற கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு பாஜக சீட்

image

பல்வேறு கட்சியிலிருந்து வந்த 106 பேருக்கு, தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 435 இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சி என்ற சிறப்பை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 74 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 326 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

News May 16, 2024

இன்றைய நல்ல நேரம்

image

மே – 16 | வைகாசி- 3
▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 PM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம்
▶ திதி : நவமி

News May 16, 2024

ராக்கி சாவந்த் மருத்துவமனயில் அனுமதி

image

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் என் சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் நடனமாடியுள்ள அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் இருப்பது போன்று வெளியான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News May 16, 2024

அட்சய திருதி நாளில் 25 ஆயிரம் கிலோ தங்க நகை விற்பனை

image

தமிழகத்தில் அட்சய திருதியை நாளில் விற்பனையான தங்கத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ₹500 கோடி வருவாய் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அட்சய திருதி நாளில் மட்டும் ₹16,750 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது. 25 ஆயிரம் கிலோ தங்கத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளனர். நகை விலை உச்சத்தை தொட்ட நிலையிலும், கடந்த ஆண்டை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது.

News May 16, 2024

அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்

image

மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய அடுத்த 15 நாட்கள் INDIA கூட்டணியினர் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!