News April 11, 2024

டயட் இருந்தும் உடல் எடை குறையவில்லையா?

image

உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் Dயின் முக்கிய பணி. வைட்டமின் D சீரான அளவில் இருந்தால்தான் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்கும். இதனால், உடல் பருமன் அதிகரிப்பது தடுக்கப்படும். ஒருவேளை வைட்டமின் D குறைபாடு இருந்தால், எவ்வளவு டயட் இருந்தாலும் வீண்தான். எனவே, உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள் வைட்டமின் D அளவை பரிசோதிப்பது மிகவும் அவசியம்.

News April 11, 2024

அரை சதம் அடித்து ஆட்டமிழந்த படிதார்

image

மும்பை அணிக்கு ஏதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிய RCB வீரர் படிதார் அரை சதம் அடித்து ஆட்டமிழந்துள்ளார். RCB 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களமிறங்கிய படிதார் டு பிளெசிஸ் உடன் இணைந்து அதிரடியாக ஆடினார். தொடர்ந்து 2 சிக்ஸர்களை அடித்து 25 பந்தில் 50 ரன்கள் அடித்த அவர், மூன்றாவது சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். RCB தற்போது வரை 12 ஓவரில் 107/3 ரன்கள் எடுத்துள்ளது.

News April 11, 2024

தருமபுரி தொகுதியில் வெற்றி யாருக்கு?

image

தமிழ்நாடு முழுவதும் 4 முனை போட்டி இருந்தாலும், தருமபுரியில் இருமுனைப் போட்டி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக மீண்டும் அதே சாதனையை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. அதே நேரம், 2014 வெற்றியை மீண்டும் பதிவு செய்யும் முனைப்பில் இருக்கிறது பாமக. வெற்றி திமுகவின் மணிக்கா? பாமகவின் செளமியா அன்புமணிக்கா? என்பதே கேள்வியாக உள்ளது.

News April 11, 2024

நடிகை ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா?

image

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர். மனைவி மெகா தொடரின் நாயகி ஷபானா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளிவந்தன. ஷபானா தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். “நான் கர்ப்பமானால் நிச்சயம் உங்களிடம் சொல்வேன். என்னுடைய வருங்காலத்திற்காக விலகுகிறேன்” என்று சமூக வலைதளங்களில் ஷபானா பதிவிட்டிருக்கிறார்.

News April 11, 2024

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய ஊழல்!

image

பிரதமர் மோடியும், பாஜகவும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகே அதானியின் பங்குகள் உயரத் தொடங்கின. தொடர்ந்து அதானியின் பங்குகள் உயர, அதானிக்கும், மோடிக்கும் உள்ள நட்புறவு காரணமென்பதை இந்தியாவே அறியும்” என்றார்.

News April 11, 2024

முதலில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழுங்கள்

image

இளைஞர்கள் முதலில் லிவ் இன் உறவில் வாழ்ந்து விட்டுப் பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென பழம்பெரும் பாலிவுட் நடிகை ஜீனத் அமான் தெரிவித்துள்ளார். ரசிகரின் கேள்விக்கு அவர் தனது இன்ஸ்டாவில் அளித்துள்ள பதிலில், “என்னுடைய மகன்களுக்கு இதே அறிவுரையை தான் வழங்கினேன். கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் சேர்ந்து வாழ முடியுமா என பார்க்க வேண்டும். இந்தியாவில் லிவ் உன் உறவை பாவமாக கருதுவதை அறிவேன்”என்றார்.

News April 11, 2024

சாதனைகளை கூறும் அரசியல் வேண்டும்

image

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் அரசியலாக இல்லாமல், சாதனைகளைக் கூறும் அரசியலாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுரையில் CPM வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பேசிய அவர், மதுரையின் பாசம், வீரம், திமுக, நமது வேட்பாளர், என்னையும் பிரிக்க முடியாது. நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் கல்வி, குடிநீர் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கூறியுள்ளார்.

News April 11, 2024

தேர்தல் பறக்கும் படை எவ்வாறு செயல்படுகிறது?

image

தேர்தல் நடத்தை விதி அமலானதும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள ரொக்கம் அல்லது பொருள்களை கொண்டு செல்வதை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். அதே போல பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்ததும் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். பிறகு 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் அலுவலருக்கு பறக்கும் படை அறிக்கை அளிக்கும்.

News April 11, 2024

திமுக, அதிமுக செய்த சாதனை இதுதான்

image

திமுக, அதிமுக ஆட்சியில் செய்த சாதனை மக்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியதுதான் என அன்புமணி விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். திமுக தோல்வியடைந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என்றார். மேலும், சேலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.

News April 11, 2024

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை

image

மதுரையில் காதல் விவகாரத்தில் கார்த்திக் (27) என்ற இளைஞரை பெண்ணின் தந்தையும், சகோதரனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கார்த்திக் லோடு மேன் வேலை பார்த்து வந்ததால் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், கார்த்திக்கை அரிவாள் மற்றும் கத்தியால் கொன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!