India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னைவாசிகள் இடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57% மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம் உச்சத்தை தொடும் நிலையில், நீர் இருப்பு 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னைக்கு அடுத்த 4 மாதங்களுக்கு போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
RCBக்கு எதிரான IPL போட்டியில் MI வீரர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதலில் கோலியை அவுட்டாக்கிய அவர், தான் வீசிய 3ஆவது ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள், 4ஆவது ஓவரில் தொடர்ந்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி, இருமுறை ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை இழந்தார். இந்த போட்டியில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கான பர்ப்பில் தொப்பியும் கைப்பற்றினார்.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 196/8 ரன்கள் குவித்துள்ளது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், டு ப்ளஸி 61, படிதார் 50 ரன்கள் அடித்தனர். கடைசியில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53* ரன்கள் குவித்தார். மும்பை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 50% வியாபாரம் குறைந்து விட்டதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். மாறாக ஆடு, மாடு வாங்கச் செல்லும் விவசாயிகளையும், வியாபாரிகளையும்தான் அவர்கள் பிடிப்பதாக விமர்சித்துள்ளார்.
வானில் நிகழும் அரிய நிகழ்வுகளை காண மக்கள் எப்போதும் ஆர்வம் கொண்டிருப்பர். அந்த வகையில், இறந்த வெண் குறுமீன் மற்றும் ரெட் ஜெயண்ட் உள்ளடக்கிய அமைப்பு நடப்பு ஆண்டு வெடித்து சிதற காத்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கொரோனா பொரியாலிஸ் என்ற அமைப்பு செப்டம்பருக்கு முன்னதாக வெடித்து சிதறவுள்ளது. இந்த நிகழ்வை தொலைநோக்கி இன்றி வெறும் கண்ணால் காணலாம்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் டு ப்ளஸி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். தொடக்கத்திலே 2 விக்கெட்டுகளை இழந்து RCB தடுமாறிவந்த நிலையில், பொறுமையாக ஆடிய டு ப்ளஸி 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஜோடி போட்டி அதிரடியாக ஆடிய படிதார் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது 17 ஓவர்கள் முடிவில் RCB அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி கடந்த 2 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை அக்கட்சிக்கு ஒலி வாங்கி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பெயருக்கு அருகிலேயே கரும்பு விவசாயி சின்னம் கொண்ட வேட்பாளரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால், வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சியின் சின்னம் எது என்று குழப்பமடைய வாய்ப்புள்ளது.
பறக்கும் படை அதிகாரிகள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான ரொக்கம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்திருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். ரூ.10 லட்சத்திற்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால் பணம் திருப்பி அளிக்கப்படும்.
தோனியின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான மிஹிர் திவாகர் ஜெய்ப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவன இயக்குநராக இருக்கும் இவர், நாட்டில் பல இடங்களில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அதில் தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தோனி தொடர்ந்த வழக்கில் மிஹிர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய சௌமியா தாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரியில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தொண்டரின் குழந்தைக்கு ரோலக்ஸ் என பெயர் வைத்தார். இதனை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் மாபியா தலைவனின் பெயரை குழந்தைக்கு வைப்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சினிமா மீது கோபம் இல்லை. மாமன்னன் மாதிரியான பிரசார படங்கள் மீதுதான் கோபம் என்றார்.
Sorry, no posts matched your criteria.