India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் மே 1 முதல் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையை நிறுத்தப் போவதாக சில்லறை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லாப பகிர்வு, கிளைம் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்வதால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 23 ரீடெய்ல் விற்பனை நிலையங்கள், 4,500 கடைகளில் ஒன் பிளஸ் விற்பனை நடைபெறாதென அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 7ஆம் தேதி சனி பகவான் குருவின் நட்சத்திரமாகிய பூரட்டாதியில் நுழைந்தார். இந்த நகர்வு அனைத்து ராசியிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதீத பலனை அனுபவிக்கப் போகின்றனர். அதன்படி, மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளும் பணமழையில் நனைய இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தொழிலில் லாபம், பணியிடங்களில் சம்பள உயர்வு, வியாபார பெருக்கம் ஆகியவை ஏற்படும்.
நாட்டில் பெண்களின் மேம்பாடு என்ற சொல்லை ‘பெண்கள் தலைமையிலான வளர்ச்சி’ என மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெண்களின் நிலை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ராணுவம் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கழிப்பறைகள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசிய முதல் பிரதமர் நான்தான் என அவர் கூறினார்.
கேரளாவில் மோடியின் முகத்தை காட்டினால் போதும், நாங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடுவோமென கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் பேட்டியளித்த அவர், “கேரளாவிற்கு மோடியும், அமித்ஷாவும் எத்தனை முறை வர முடியுமோ வரட்டும். ஒவ்வொரு முறை அவர்கள் வரும் போதும் எங்களுக்கு ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. அவர்களின் கொள்கைகளை மக்கள் நன்கறிவர். பாஜக ஒரு சீட் கூட பெறாது” என்றார்.
RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் மும்பை வீரர் இஷான் கிஷன் 23 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இவரது அதிரடியால் மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் 84 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 26*, இஷான் கிஷன் 56* ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகின்றனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் RCB பவுலர்கள் திணறி வருகின்றனர். இருவரும் சேர்ந்து சிக்ஸர் மழை (7சிக்ஸர்கள்) பொழிந்து வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும், அவர்களால் தேர்தலில் வெல்ல முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், மதவாத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றார். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பை – பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் டக் அவுட்டான RCB வீரர் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்குடன் முதல் இடத்தில் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ரஷித் கான், பியூஷ் சாவ்லா, நரைன், மந்தீப் சிங் 15 முறை டக் அவுட்டாகியுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை ஆட்டம் காண வைக்கவே ஆட்டோவில் பரப்புரை மேற்கொள்வதாக பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவில் பரப்புரை செய்த அவர், “மக்களோடு இருப்பது தான் எனக்கு வசதி. ஆளுநராக இருந்த போது கிடைத்த வசதிகளை விட்டு வந்துள்ளேன்” என்றார். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை, தேர்தலில் போட்டியிட பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விலையில்லா சர்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டையடுத்து, தகுதியற்ற பலரின் பெயரை அரசு நீக்கியது. இவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது நீக்கப்பட்டவர்களுக்கும் இலவச பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டுமென அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “தேர்தல் பிரசாரங்களில் மோடியின் பேச்சு முழுக்க முழுக்க மதத்தையும், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அமைத்திருக்கிறது. எனவே மோடி மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.