News April 12, 2024

இந்த தவற்றை மறந்தும் செய்து விடாதீர்கள்

image

பிறந்த குழந்தைக்கு பழைய துணிகளை முதலில் அணிவிப்பதை சிலர் சம்பிரதாயமாக வைத்துள்ளார்கள். நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்த பிறகே அணிவிக்க வேண்டும். சில இடங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்.

News April 12, 2024

தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டு இந்தியாவை பாருங்கள்

image

தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், இந்தியாவை காப்பாற்ற அழைக்கும் முதல்வர் இதுவரை தமிழ்நாட்டை காப்பாற்ற எதையும் செய்யவில்லை என்றார். மேலும், மாநில உரிமைகளை பிரதமர் தொடர்ந்து பறித்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வேட்டு வைத்துக்கொண்டு இருப்பதாக கூறிய அவர், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும் எனவும் கூறினார்.

News April 12, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 12, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
➤ தமிழகத்தில் ரூ.303 கோடி பறிமுதல்
➤ உதயநிதியின் முதல்வர் கனவு பலிக்காது – இபிஎஸ்
➤ தேர்தலுக்கு பிறகு திமுக காணாமல் போகும் – ஜெயக்குமார்
➤ ‘பொன் ஒன்று கண்டேன்’ ட்ரெய்லர் வெளியானது
➤ ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா

News April 12, 2024

ஐஃபோன் வாடிக்கையாளர்களே உஷார்

image

இந்தியாவில் உள்ள ஐஃபோன்களில் உளவு பார்க்கும் மென்பொருள் இருக்கக் கூடும் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த மென்பொருள் பெகாஸஸ் மென்பொருளை விட சக்தி வாய்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளின் ஐஃபோன் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

News April 11, 2024

நில்லாமல் ஓடி கின்னஸ் சாதனை படைத்தவர்!

image

ஒடிசாவின் ரூர்கேலாவை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், ட்ரெட்மில்லில் 12 மணி நேரம் நிற்காமல் தொடர்ந்து ஓடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். புதிய சாதனையை படைத்த சுமித் குமார் சிங், கடந்த மார்ச் 12ஆம் தேதி காலை 8.15 மணிக்கு தொடங்கி, இரவு 8.20 மணி வரை, தொடர்ச்சியாக 68.04 கி.மீ அளவுக்கு ஓடியுள்ளார். இதுவரை 33 மாரத்தான்களில் பங்கேற்றுள்ள சுமித், 1,392 கி.மீ தொலைவை கடந்துள்ளார்.

News April 11, 2024

ஆர்சிபியை பந்தாடிய மும்பை அணி

image

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு 196/8 ரன்கள் எடுத்தது. டு ப்ளஸி 61, படிதார் 50 ரன்கள் அடித்தனர். 197 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய மும்பை ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இஷான் கிஷன் 69, சூர்ய குமார் யாதவ் 52 , ரோகித் 38 ரன்கள் எடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மும்பை சிறப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தியது.

News April 11, 2024

பெங்களூரு அணி பரிதாப தோல்வி

image

10ஆவது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக சென்னையின் எஃப்.சி நேற்று முன்னேறியது. இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில், ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மோகன் பகான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கடைசி வரை கோல் எதுவும் அடிக்காமல் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

News April 11, 2024

APPLY NOW: திருச்சி IIM இல் வேலை

image

திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம், வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>https://www.iimtrichy.ac.in/en/careers-teaching<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு IIM அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

News April 11, 2024

தேர்தல் பத்திர திட்டத்தால் எந்த வருத்தமும் இல்லை

image

தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக எந்த வருத்தமும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், “தேர்தல் பத்திர திட்டத்தின் நன்மைகள் குறித்து காலமே தீர்மானிக்கும். நாங்கள் நீதிமன்றத்துக்கு எதிரானவர்கள் அல்ல. உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.

error: Content is protected !!