News April 12, 2024

குழந்தை வளர்ப்பில் முக்கிய அம்சங்கள்

image

குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும். மேலும், குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால் வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஆகும். காய்கறிகளை முடிந்த வரை குழந்தைகள் சாப்பிட பழக்க வேண்டும்.

News April 12, 2024

வரலாற்றில் இன்று

image

➤1167 – சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார்.
➤1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
➤1983 – காந்தி திரைப்படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
➤2009 – ஜிம்பாப்வே தனது டாலர் நாணயத்தை அதிகாரபூர்வமாகக் கைவிட்டது.
➤2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்,

News April 12, 2024

மோடியை தொடர்ந்து தமிழகம் வரும் ராகுல்

image

I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் இன்று நெல்லையில் பரப்புரை மேற்கொள்கிறார். 6 மாவட்டங்களை சேர்ந்து 8 வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பலமுறை தமிழகத்தில் பரப்புரை செய்த நிலையில், ராகுல் நாளை தேர்தல் பரப்புரையை தமிழ்நாட்டில் துவங்குகிறார்.

News April 12, 2024

தனித் திறமைகளே டி20 போட்டிகளில் கரை சேர்க்கும்

image

டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாகவே இருக்கும் என பும்ரா கூறியுள்ளார். யார்கர் மட்டுமே வீசி எதிரணியை வெல்ல முடியாது என்ற அவர், தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதே டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கான முக்கிய வழி என்றார். தொடர்ந்து பேசிய அவர், வெற்றியோ, தோல்வியோ அதை நினைத்து தான் பெரிய அளவில் சந்தோஷம் பட மாட்டேன் எனக் கூறினார். ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

News April 12, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

News April 12, 2024

எப்படி இருந்த ஊட்டி இப்படி ஆயிடுச்சு

image

ஒரு காலத்தில் சின்ன கோடம்பாக்கமாக இருந்த ஊட்டியில், தற்போது படப்பிடிப்பும் நடப்பதில்லை என நடன இயக்குநர் கலா தெரிவித்துள்ளார். நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால், அதை மறைக்கிறார்கள். இன்றைக்கு கவுன்சிலர்களை கூட உடனடியாக பார்க்க முடியாது. ஆனால், எல்.முருகனை எப்போதும் பார்க்க முடியும் என்றார்.

News April 12, 2024

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி

image

தமிழக அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கத்தரிக்காய்க்கு கால் முளைத்த மாதிரி அண்ணாமலை தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு பேசி வருகிறார். அரசியல் என்றால் என்னவென்று தெரியாத அவர் அதிமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்ற அவர், பாஜக நோட்டாவை தாண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவை அழிக்க நினைத்த ஜாம்பவான்களே இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள் என்றார்.

News April 12, 2024

வந்த உடன் நடையை கட்டும் மேக்ஸ்வெல்; ரசிகர்கள் வருத்தம்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார் க்ளென் மேக்ஸ்வெல். 6 போட்டிகளிலும் முறையே 0, 3, 28, 0, 1, 0 ரன்களை அடித்துள்ளார். இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் மோசமான ஃபார்மில் அவர் உள்ளதாக ஆர்சிபி ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். மேலும், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலிலும் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார்.

News April 12, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News April 12, 2024

அதிமுகவை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது

image

அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனையோ சோதனைகளை அதிமுக கடந்து வந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசிர்வாதம் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்ற அவர், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பொய்களை மட்டுமே பேசி வரும் திமுகவுக்கு, மக்கள் தகுந்த தண்டனையை தேர்தலில் தருவார்கள் என்றும் கூறினார்.

error: Content is protected !!