News May 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News May 17, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தமிழகம் முழுவதும் பரவலாக மழை
➤ பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது – மம்தா
➤ அரண்மனையில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள் – மோடி
➤ மக்களை பிளவுப்படுத்தி வெற்றி பெற பாஜக முயல்கிறது- ராகுல்
➤ வட மாநிலங்களில் பாஜக தோல்வி அடையும் – கெஜ்ரிவால்
➤ பிளே-ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி தகுதி

News May 17, 2024

ஆந்திராவில் அதிகாரிகளை இடமாற்றிய தேர்தல் ஆணையம்

image

திருப்பதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 எஸ்.பி.,க்கள், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம், அத்துடன் 2 எஸ்.பி.,க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆந்திராவில் நடந்த வன்முறைகள் குறித்து இரண்டு நாள்களில் எஸ்ஐடி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 16, 2024

ED மீட்ட பணத்தை ஏழைகளுக்கு தர திட்டம்

image

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயனற்ற அமைப்பாக இருந்த அமலாக்கத்துறை (ED) தற்போது சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “2004 – 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பித்தர அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்

News May 16, 2024

இந்த வரைபடங்களை பயன்படுத்தினால் சிறை

image

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘சர்வே ஆஃப் இந்தியாவின் வரைபடங்களுடன் ஒத்துப்போகாத இந்திய வரைபடத்தை வெளியிடும் நபருக்கு அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது 2 தண்டனையும் ஒருசேர விதிக்கப்படும், எனவே உயர்கல்வி நிறுவனங்கள் இந்த சட்டத்துக்கு இணங்குவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

News May 16, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – ஓய்வு தேவை
*ரிஷபம் – குழப்பம் உண்டாகும்
*மிதுனம் – ஆரோக்கியமான நாள்
*கடகம் – வெற்றி கிடைக்கும்
*சிம்மம் – சுகபோக வாழ்க்கை
*கன்னி – நட்பு வட்டம் உயரும்
*துலாம் – அமைதி தேவை
*விருச்சிகம் – சலனம் உண்டாகும்
*தனுசு – முயற்சிக்கேற்ற பலன்
*மகரம் – ஆர்வம் அதிகரிக்கும் *கும்பம் – பயம் ஏற்படும் *மீனம் – பகை உண்டாகும்

News May 16, 2024

காவிரியில் 2.5 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்!

image

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. ஒழுங்காற்று குழுவின் 96ஆவது கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக சார்பில் ஆஜரான அதிகாரிகள் “அணைகளில் போதிய அளவு நீர் இல்லை” எனக் கூறினர். இதனை நிராகரித்த ஒழுங்காற்று குழு, மே மாதத்திற்கான நீரை திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

News May 16, 2024

கெஜ்ரிவால் உதவியாளர் தாக்கியது குறித்து எம்பி புகார்

image

கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து அவரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரித்தனர். அப்போது 2 பக்க விரிவான புகாரை ஸ்வாதி மாலிவால் அளித்ததாகக் கூறப்படுகிறது.

News May 16, 2024

புஷ்பா-2 படத்தில் இருந்து விலகிய பிரபலம்?

image

இந்திய சினிமா உலகின் முன்னணி படத் தொகுப்பாளராக இருப்பவர் ஆண்டனி ரூபன். அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவாகிவரும் ‘புஷ்பா-2’ படத்திலிருந்து எடிட்டர் ஆண்டனி ரூபன் விலகியுள்ளார். ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தால், அவர் இப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தெறி, வேதாளம், ரெமோ, அண்ணாத்த, ஜவான் போன்ற படங்களில் அவர் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது SRH

image

நடப்பு ஐபிஎல் சீசனில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி முன்னேறியது. குஜராத்-ஹைதராபாத் அணிகள் இன்று மோதவிருந்த 66ஆவது லீக் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக முன்னேறியது. இதனிடையே, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

error: Content is protected !!