India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
MI-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில், நடுவர்கள் ஒருதலை பட்சமாக இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பவர் பிளேவில் பெங்களூரு அணி அடித்த பவுண்டரியை ரிவியூ செய்யவில்லை. மும்பை அணி 2 ரிவியூக்களை இழந்த போதிலும், 3ஆவது நடுவரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. இடுப்புக்கு மேல் போன பந்திற்கு No Ball கொடுக்கவில்லை. இவ்வாறு பல சர்ச்சைகள் எழுந்ததால், நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.
மத்திய கணக்கு தணிக்கை (சிஏஜி) அலுவலக ஆடிட்டர் ஜெனரலை திருப்பியதால், அந்த அமைப்புக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கணக்கு தணிக்கைக்காக சிஏஜியால் அனுப்பப்பட்ட மூத்த அதிகாரியான ஜெய்சங்கரை அவரது பணிக்கே மீண்டும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழக அரசு திருப்பி அனுப்பி உத்தரவிட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், சிஏஜி உடனடியாக தலையிட வலியுறுத்தியும் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆடிட்டர் ஜெனரல் ஜெய்சங்கரை அவரது பணிக்கே திருப்பி அனுப்பி உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியபோது, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023 விதிகளுக்கு எதிராக ஜெய்சங்கர் சில உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், அதனாலேயே ஜெய்சங்கரை திருப்பி அனுப்பி உத்தரவிட்டதாகவும் உதயசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.54 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தத் திட்டங்கள், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை.
உலகளவில் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், 4ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் ‘உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம் & புள்ளியியல்’ அறிக்கையில், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023இல் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், இந்தியா 17% வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் மதிப்பு ₹21.42 லட்சம் கோடியாகும். இத்துறையில், சீனா 4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
1980இல் துவங்கப்பட்ட பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 1984இல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி வெறும் 2 தொகுதிகளில் வென்றது. குஜராத்தில் ஏ.கே. பாட்டீல் என்பவரும், ஆந்திராவில் ஜங்கா ரெட்டி என்பவரும் வென்றனர். இதுபோல 2 தொகுதிகளில் மட்டுமே வென்று கணக்கை ஆரம்பித்து, தற்போது 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்துள்ளது.
என்.டி.ஏ கூட்டணியை விட்டு வெளியேறினால், அதிமுகவை இரண்டாக உடைத்து விடுவோமென இபிஎஸ்ஸை பாஜக மிரட்டியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். நாகையில் பேசிய அவர், “இ.டி., ஐ.டி., சி.பி.ஐ., ரெய்டு வரும் என அச்சுறுத்தினர். முக்கியமானவர்களை தூக்கி விடுவோம் என எச்சரித்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல், இனி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் அறிவித்தார்” எனக் கூறினார்
RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சூர்யகுமார் யாதவ் கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அவர், முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நேற்றைய போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி அசத்தினார். இதனால் 17 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 52(19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Sorry, no posts matched your criteria.