India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வாட்டி வதைத்துவந்த சூழலில் இரண்டு நாள்களாக கிழக்கு காற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை, நாகை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை இல்லாத பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாலை 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரைன் லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 43 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசிய அவர், ஒரே இன்னிங்ஸில் 400* ரன்கள் குவித்து அசத்தினார். அதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் 400 ரன்கள் அடித்ததில்லை. இதனால் அணியின் மொத்த ஸ்கோர் கியகியே
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவிற்கே விடியல் பிறக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் புதிய அறிவிப்புகள் சாத்தியமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டை வளப்படுத்த முடியாத அளவில் இடைஞ்சலாக இருக்கும் மோடி அரசை அகற்றினாலே அனைத்தும் சாத்தியம் என்றார். மேலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் விடியல் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்றார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதில் 3,340 நடத்துனர்கள், 1,975 ஒட்டுனர்கள் உள்ளிட்ட 5,688 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2024 ஏப்ரல்-மே மாதம் நடைபெறும் இத்தேர்வுக்கு, www.tnstc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நாளைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்றார்.
ஒரே நேரத்தில் சுதா கொங்கரா & கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவர் இயக்கவுள்ள இருவேறு படங்களில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இறுதிக்கட்டத்தில் உள்ள ‘கங்குவா’ படப்பிடிப்பை முடித்த கையோடு, இந்த இரு படங்களிலும் அவர் பணியாற்ற உள்ளார். ‘தளபதி 69’-ஐ இயக்குநர் எச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியானதன் காரணமாக சூர்யாவுடன் அவர் கமிட்டானதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ராகுலுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை மற்றும் கோவையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல், I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 19 வயதான இந்தியாவின் இளம் வீரர் உதித் (57 கிலோ) வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றில் உதித், ஜப்பானின் கென்டோ யுமியாயுடன் மோதினார். இதில் 4-5 என்ற கணக்கில் அவர் போராடித் தோற்றார். இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் 2ஆம் இடம் பிடித்த உதித் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
Sorry, no posts matched your criteria.