News April 12, 2024

தமிழ் எந்த வகையிலும் குறைந்த மொழியில்லை

image

இந்தியாவில் உள்ள மொழிகளை விட தமிழ் எந்த வகையிலும் குறைந்தது இல்லை என ராகுல் காந்தி பேசியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒருபக்கம் பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவம் போன்றவை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியைப் போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேஷமும் இருக்கிறது. மோடி ஒரே நாடு, ஒரே மொழி என சொல்கிறார்” என்றார்.

News April 12, 2024

விலகுவதாக அறிவித்தார் பாமக மாவட்ட செயலாளர்

image

கோயம்புத்தூர் தொகுதியில் பிரசாரப் பணிகள் செய்வதில் இருந்து விலகுவதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார். வரும் தேர்தலை பாஜக – பாமக கூட்டணியிட்டு சந்திக்கின்றன. கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அவர்கள் பாமகவை மதிக்கவில்லை என்று கோவை ராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். கூட்டணி தர்மத்தை விட சுய மரியாதைதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 12, 2024

ஆதாரம் கேட்டதும் பின்வாங்கி விட்டது காங்கிரஸ்

image

மாட்டிறைச்சி சாப்பிட்டதற்கு ஆதாரம் கேட்டதும் காங்கிரசார் பின்வாங்கி விட்டதாக மன்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். மணாலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தாம் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக காங்கிரசார் முதலில் கூறியதாகவும், ஆதாரம் கேட்டதும், அப்படி சொல்லவில்லை என பின்வாங்கி விட்டதாகவும், தனது குணநலன் குறித்த குற்றச்சாட்டிலும் இதேபோல் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.

News April 12, 2024

இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடி தமிழ்நாடு!

image

இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண்ணாடியாக தமிழ்நாடு விளங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லையில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “தமிழ்நாட்டிற்கு வருவதற்கு நான் விரும்புகிறேன். தமிழக மக்கள் மீது அன்பு செலுத்துகிறேன். உலகிற்கு பெரியார், அண்ணா போன்ற ஆளுமைகளை தமிழ்நாடு தந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் அரசியலைத் தாண்டி குடும்ப உறவு உள்ளது” என்றார்.

News April 12, 2024

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

image

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி, 235 புள்ளிகள் குறைந்து 22,520 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பவர் க்ரிட், ஓஎன்ஜிசி, ஐஓசி ஆகிய பங்குகளின் மதிப்பு அதிகளவு குறைந்தது. அதேநேரம், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே ஆகிய பங்குகளின் விலை ஏறுமுகத்தில் இருந்தது.

News April 12, 2024

கவிதாவுக்கு ஏப்ரல் 15 வரை சிபிஐ காவல்

image

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை வரும் 15ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கவிதாவை நேற்று கைது செய்த சிபிஐ, 5 நாள்கள் விசாரிக்க அனுமதி கோரியிருந்தது. இதற்கு முன்னதாக, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

News April 12, 2024

சென்னையில் விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகை

image

சென்னை போரூர் அருகே சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. அப்போது அதிக அளவிலான சிமெண்ட் கலவை அவரது காரில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார் மிகவும் சேதமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

News April 12, 2024

தமிழ்நாட்டில் உதயசூரியன் உதிக்கக் கூடாது

image

தமிழ்நாட்டில் உதயசூரியன் உதிக்கக் கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஓசூரில் பிரசாரம் செய்த அவர், போதைப் பொருள்கள் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. போதைப்பொருள்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றார்.

News April 12, 2024

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட வீடியோவை வெளியிடுங்கள்

image

திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோவையாக இருக்குமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொகுதிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், “வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என எந்த விதியும் கிடையாது. ஆவாரம்பாளையம் பகுதியில் காவல்துறை அனுமதி கொடுத்த இடங்களுக்கு தான் நேற்று சென்றேன். 10 மணிக்கு மேல் நான் மைக்கை எடுத்து பிரசாரம் செய்த வீடியோக்களை வெளியிட வேண்டும்” என்றார்.

News April 12, 2024

அறிகுறியே இல்லாமல் கண் பார்வை போகலாம்

image

கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு வகை நோய். இதன் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. பரிசோதனையின் மூலமே இந்த நோயை கண்டறிய முடியும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையான பார்வை இழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயது வித்தியாசம் இன்றி பாதிக்கும் இந்நோய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.

error: Content is protected !!