India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
◾விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைகளில் விஷத்தை உமிழ்வதாக என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தென் இந்திய மக்களை பற்றி மோடி அவதூறு பரப்புவதாக தெரிவித்த அவர், நாட்டை பிளவுப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று பாஜக நினைப்பதாக குற்றம் சாட்டினார். முன்னதாக, தென் இந்திய மக்கள், உ.பி போன்ற வட இந்திய மக்களை தவறாக நினைப்பதாக தேர்தல் பரப்புரையில் மோடி பேசியிருந்தார்.
இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மன அழுத்தத்தை குறைக்க, தினமும் குறைந்தது 30 நிமிடம் காலையில் தியானம் செய்து வரலாம். உடற்பயிற்சி, முறையான தூக்கம், சரியான உணவு முறைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மும்பை எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ வீரர் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், மும்பை பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 29 பந்துகளில் 75 ரன்களை குவித்த அவர், 8 சிக்சர்களை பறக்க விட்டார். இந்த போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.
இன்று (மே 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
திமுகவோடு காங்கிரஸ் கட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட தாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறுவதாக தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை என்றார். முன்னதாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறியிருந்ததால், திமுகவுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்தது.
வாட்டிகன் நகரம் – (பரப்பு: 0.44 சதுர கிமீ)
மொனாக்கோ – (பரப்பு: 1.95 சதுர கிமீ)
நவ்ரு – (பரப்பு: 21 சதுர கிமீ)
துவாலு – (பரப்பு: 26 சதுர கிமீ)
சான் மரினோ – (பரப்பு: 61 சதுர கிமீ)
லிச்சென்ஸ்டைன் – (பரப்பு: 160 சதுர கிமீ)
மார்ஷல் தீவுகள் – (பரப்பு: 181 சதுர கிமீ)
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் – (பரப்பு: 261 சதுர கிமீ)
மாலத்தீவு – (பரப்பு: 298 சதுர கிமீ)
மும்பைக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 214/6 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பூரண் 75 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய மும்பை அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.
இன்று (மே 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்படலாம் – மோடி
➤ பொய் சொல்வதையே மோடி குறிக்கோளாக வைத்துள்ளார்- பிரியங்கா காந்தி
➤ காங்கிரஸ் கட்சியால் நிலையான ஆட்சியை தர முடியாது – அமித் ஷா
➤ டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு
➤ சூர்யா படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
➤ இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் போட்டியிட வாய்ப்பு
Sorry, no posts matched your criteria.