News April 12, 2024

தனுஷ் தன் மகன் என கூறியவர் காலமானார்

image

தனுஷ் தன் மகன் என கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த கதிரேசனுக்கு கடந்த ஓராண்டாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

News April 12, 2024

பாஜக பீதியில் இருக்கிறது

image

தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக பீதியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதாக தெரிவித்த அவர், தேர்தல் முடிவில் ஆட்சியை பிடிப்போம் என்றார். இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை பின் தொடர்வது, கெஜ்ரிவாலை நள்ளிரவில் கைது செய்தது, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியது என பாஜகவின் செயல்பாடுகள் விரக்தியின் வெளிப்பாடு என்றார்.

News April 12, 2024

அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி ஃபோட்டோ

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது மதுரையில் பிரசாரம் செய்து வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் நடிகர் சந்தான பாரதியின் ஃபோட்டோ இடம் பெற்றுள்ளது. இருவரும் உருவ அமைப்பில் ஒரே மாதிரியாக இருப்பதால் பாஜகவினர் குழப்பமடைந்து விட்டனர். ஆனால், ஒருவர் கூட இதனை கண்டுபிடிக்காமல் போஸ்டராக ஒட்டும் வரை வந்திருக்கிறதே என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர்.

News April 12, 2024

அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் 5ஆம் தேதி கணக்கீட்டின்படி, அந்நியச் செலாவணி 2.98 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 648.562 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இருப்பை பொருத்தமட்டில், 2.39 பில்லியன் டாலர் உயர்ந்து 54.55 பில்லியன் டாலராக உள்ளது. Special Drawing Rights 18.17 மில்லியன் டாலரில் இருந்து 24 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

News April 12, 2024

11 மாவட்டங்களில் மழை கொட்டும்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) மழை பெய்யக் கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

CUET PG தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

image

CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்றிரவு வெளியிட இருப்பதாக யு.ஜி.சி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏப்.5 ஆம் தேதி மாதிரி விடைத்தாள் வெளியான நிலையில், இன்று <>இந்த<<>> இணையதளத்தில் இறுதி விடைத்தாள் (Final Answer Key) வெளியிடப்பட்டுள்ளது.

News April 12, 2024

எந்த சக்தியாலும் தமிழர்களை வீழ்த்த முடியாது

image

பிரதமர் மோடியால் மட்டுமல்ல, உலகின் எந்த சக்தியாலும் தமிழர்களை வீழ்த்த முடியாதென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லையில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “சமூகநீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள் தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். இதனால் தான் இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்” என்றார்.

News April 12, 2024

IPL: லக்னோ அணி பேட்டிங்

image

லக்னோவில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் DC அணி பவுலிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் 3 வெற்றியுடன் LSG 3ஆவது இடத்திலும், DC 1 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 12, 2024

சில்லறை பணவீக்கம் குறைந்தது

image

மார்ச் மாத சில்லறை பணவீக்கம் (CPI) 4.85 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரியில் 5.09 சதவீதமாக இருந்த CPI, தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் CPI 5.66 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறையும்பட்சத்தில் வீட்டுக் கடன் ஆகியவற்றின் வட்டி குறையும்.

News April 12, 2024

ஃபோனில் ‘ஹலோ’ சொல்லாதீங்க

image

அடுத்த 7 நாட்களுக்கு செல் ஃபோனில் ‘ஹலோ’ என்று சொல்லாமல் ‘தாமரை வணக்கம்’ என்று சொல்லுமாறு பாஜகவினருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாஜக தொண்டர்களுக்கு அவர் இந்த் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

error: Content is protected !!