India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167/7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் பதோனி 55*, கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. DC தரப்பில் அபாரமாக பவுலிங் செய்த குல்தீப் 3, கலீல் அஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
வாரணாசி காசி விஸ்வநாதன் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகளை போல காவி உடை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், சமூக விரோதிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், பக்தர்களின் மன நிறைவுக்காகவே இந்த உடை அளிக்கப்பட்டுள்ளதாக வாரணாசி காவல் ஆணையர் பதில் அளித்துள்ளார்.
பேஸ்புக்கில் கடந்த ஆண்டு ‘ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை பார்த்த கேரளாவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞர் அப்பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய மதிப்பில் மாதம் ரூ.1.82 லட்சம் சம்பளம் தருவதாக அழைத்துச் சென்ற அவர்கள், கிழக்கு உக்ரைன் பகுதியில் போர்முனையில் சண்டையிட வைத்துள்ளனர். பல சோதனைகளை கடந்து அந்த இளைஞர் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கக்கூட இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். விரைவில் அவர் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனையடுத்து அவரது ஓய்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்திருக்கும் ரோஹித், “எனது பேட்டிங் ஃபார்ம் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இது இன்னும் சில ஆண்டுகள் தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்
மலையாள நடிகரான நிவின் பாலி, ‘நேரம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்த அவர், தற்போது ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான இப்படம் நேற்று வெளியான நிலையில், வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நிவின் பாலியின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.
திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், “திமுகவின் 3 ஆண்டு ஆட்சியில், செங்கல், மணல், கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் வீடு கட்டுவது கனவாகி விட்டது. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில், கட்டுமான பொருட்களை சேர்க்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
மோடி ஊழலைப் பற்றி பேசினால், ‘யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வை’ அப்படித்தான் மக்கள் பேசுவார்களென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார் ” என்றார்.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ் நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார். இதுவரை RCB அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதிலும் மூன்று போட்டிகளில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ரன்களையும் வாரி வழங்கி வருகிறார். விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்பவில்லை என்றால் உலகக்கோப்பையில் இடம் பெறுவது கடினமாக இருக்கும்.
பிரசாரக் கூட்டத்தில் மாமிச உணவு தொடர்பான கருத்துகளை பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஷ்ராவன மாதத்தில் மாமிசம் சாப்பிடுவது போன்ற ஃபோட்டோக்களை பதிவிட்டு மனதை புண்படுத்துவதாக பிரதமர் பேசியிருந்தார். சுமார் 75% மாமிச விரும்பிகள் இருக்கும் இந்தியாவில் யாரை கவர பிரதமர் இவ்வாறு பேசுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராகுல் அவர்களே வருக..புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கோவை செட்டிபாளையத்தில் ராகுல், ஸ்டாலின் கூட்டாக பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், “எப்போதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா, ராகுல் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அன்பு உண்டு. மக்களவைத் தேர்தலில் கதாநாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான்” என்றார்.
Sorry, no posts matched your criteria.