India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊடுருவல்காரர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடைக்கலம் அளித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார். மம்தா வாக்கு வங்கி அரசியல் செய்வதாக விமர்சித்த அவர், ஊடுருவல்காரர்களுக்கு ரேஷன் கார்டு, அடையாள அட்டை கொடுத்து வாக்காளர்களாக மாற்றுவது தேச விரோதம் எனத் தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் சிஏஏ குறித்து தவறான கருத்து பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் படி, தூதரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, பிஷ்கெக் பகுதியில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மீது சில கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், சில பாகிஸ்தான் மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு நாளையும் நாளை மறுநாளும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை (மே 19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 20ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பேரிடர் மீட்புக்குழுவினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவிற்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இல்லை என பிரேதபரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சித்தார்த்தின் 40ஆவது படத்தை ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், உலகளவில் ஈர்ப்பு கொண்ட கதையைக் கொண்டிருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. அனைவரது மனங்களிலும் எதிரொலிக்கும் வகையில் இப்படம் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
டெல்லி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிலிருந்தே வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளார். டெல்லியில் வீட்டிலிருந்து வாக்களிக்க விண்ணப்பித்த முதியவர்களிடம் வீட்டிற்கு சென்று வாக்கு பெறும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி முகமது ஹமீது அன்சாரி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் இன்று வாக்களித்தனர்.
தென் கொரியாவில் நடத்தப்படும் வினோதமான போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இப்போட்டியில் போட்டியாளர்கள் 90 நிமிடங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார வேண்டும். யாரிடமும் பேசாமல், செல்ஃபோன் பயன்படுத்தாமல், தூங்காமல் 90 நிமிடங்களை கழித்துவிட்டால் ஏற்பாட்டாளர்கள் பரிசு வழங்குகின்றனர். வேகமான நகர வாழ்க்கை முறையில் இருந்து விடுபட இப்போட்டி நடத்தப்படுகிறது.
உ.பி.,யில் பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் செயின்ட் ஜோசப் பள்ளி குழுமத்தின் ஆசிரியர்கள் சாலையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம் சென்றனர். மேலும், பெற்றோர்கள் வாக்களித்த பின், கையிலிடப்பட்ட மையை தங்கள் பள்ளிகளில் காட்டினால் அடுத்த தேர்வில் அவர்களின் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தனியார் பள்ளியின் இந்த முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி பாலிவுட்டில் புதிய படம் உருவாக்கப்பட உள்ளது. இதில் நடிகர் சத்யராஜ் மோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்றும், இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சத்யராஜ் தவிர மோடி வேடத்தில் நடிக்க சரியான நடிகர் யார்?
Sorry, no posts matched your criteria.