India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹைதராபாத்துக்கு எதிரான நாளைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி கேப்டனாக ஜிதேஷ் ஷர்மா செயல்பட உள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக இங்கி., வீரர் சாம் கரண், பஞ்சாப் அணியை வழிநடத்தி வந்தார். உலகக் கோப்பைத் தொடருக்காக சாம் கரணும் நாடு திரும்பியுள்ளதால், அவருக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா பஞ்சாப் அணியை வழிநடத்த உள்ளார்.
சென்னைக்கு 10ஆம் தேதி வந்த பிரசாந்த் கிஷோர், திமுக தலைமைக்கு வேண்டப்பட்டவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம், பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்தால், திமுகவுக்கு பயங்கர குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பலரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததாகவும், கட்சியிலும், அமைச்சரவையிலும் மாற்றங்களை செய்யும்படி அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. கோவாக்சின் செலுத்திக் கொண்ட பலர் இறந்துவிட்டதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வலம் வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து விளக்கிய மருத்துவர்கள், கோவாக்சின் தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தாது எனவும், சிலருக்கு குறுகிய கால பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் விளையாட 50 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மாநிலத்தில் இருந்தும் சிறப்பாக விளையாடிய 50 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேசிய அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் ஒரே நேரத்தில் 3 நாடுகளின் அணிகளுடன் இருதரப்பு போட்டிகளில் இந்தியாவால் தற்போது விளையாட முடியும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சேலம், நீலகிரி, தருமபுரி, திருப்பத்தூர், குமரி ஆகிய மாவட்டங்களிலும் அதன் சுற்றுவட்டார ஊர்களிலும் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது. அத்துடன், ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. ஏற்கெனவே, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு, பாஜகவில் சரத்குமார் இணைந்தார். இதையடுத்து விருதுநகரில் ராதிகா போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. இந்நிலையில், தேர்தல் முடிவு வந்து, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால், அண்ணாமலை மத்திய அமைச்சராகலாம் என கூறப்படுவதால், தமிழ்நாடு மாநில பாஜக தலைவராகும் முயற்சியில் சரத் ஈடுபட்டு இருப்பதாகவும், மேலிடத்துடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இம்பேக்ட் வீரர் விதி குறித்த ரோஹித் ஷர்மாவின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக விராட் கோலி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த விதியால் ஒவ்வொரு பந்தும் 6, 4க்கு செல்லும் என நினைக்கும் அளவிற்கு பவுலர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், எல்லா அணிகளிலும் பும்ரா, ரஷித் கான் போன்ற பவுலர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விதி குறித்து ஜெய் ஷா மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தேர்ட் பார்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியம். இந்த காப்பீடு இருக்கும்பட்சத்தில், வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இழப்பீடு அளிக்கும். இது கூட இல்லையெனில், முதல்முறையாக சோதனையில் பிடிபட்டால், ₹2,000 அபராதமும், மீண்டும் பிடிபட்டால் ₹5,000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்க மோட்டார் வாகனச் சட்ட 196ஆவது பிரிவில் வழிவகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய முதன்மை செயலர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார். அரசு ஒதுக்கும் பொருட்களை எவ்வித தாமதமுமின்றி மக்களுக்கு உரிய நேரத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகிக்கவும், பொருட்கள் இருப்பு விபரங்களை அறியும் வகையில் தினமும் பலகையில் எழுதவும் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.