India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் தீபாவளி அன்று வெளியாகுமென இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படம், வரலாற்று பின்னணியைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதுவே, சூர்யாவின் கரியரில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலகளவில் நடைபெறும் LGBTQIA+ பிரைட் நிகழ்வுகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. LGBTQIA+ மக்கள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பிரம்மாண்ட பேரணிகளை நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு தற்போது முன்னாள் முதல்வர் இபிஎஸ் தலைமைத் தாங்கி வழிநடத்தி வருகிறார். அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா தனித்தனி அணிகளாக செயல்படுகின்றனர். தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவரையும், அதிமுகவில் இணைக்க தீவிர முயற்சி நடந்து வருவதாகவும், இதுகுறித்து இருவருடனும் நடந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணி வீரர் ரோஹித் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதனிடையே தனது மகள் சமைராவுடன் சேர்ந்து அவர் எடுத்த புகைப்படம் வைரலாகிறது. அதை பார்த்த பலரும் 2 பேரையும், பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாள்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பகிர்ந்து, சுற்றுலா செல்வோர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசியை தான், உலகின் சிறந்த அரிசியாக டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில், சுமார் 34 வகையான அரிசிகள் பயிரிடப்படுகின்றன. அதில், டேராடூன், பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட 10 வகையான பாஸ்மதி அரிசிகள் பிரபலமானவை. சாதாரணமான அரிசியை போல் இல்லாமல், பாஸ்மதி அரிசி தோற்றத்திலும் சற்று வித்தியாசமானதே. இந்த மெல்லிய நீண்ட அரிசிகள் சுவைக்கு மட்டுமன்றி வாசனைக்கும் பெயர் போனது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் ரயில்களில் முன்பதிவு செய்ய எப்போது இணையதளத்தை பார்த்தாலும், ஆர்ஏசி, வெயிட்டிங் என்றே காட்டுகிறது. தட்கல்லில் முன்பதிவு செய்ய விரும்பினாலும் உடனே காலியாகி விடுகிறது. இதனால் தென்மாவட்ட மக்களுக்கு ரயிலில் குடும்பத்துடன் நிம்மதியாக சொந்த ஊர் சென்று, சென்னை திரும்புவது கனவாக மாறிவிட்டது. இதை கவனத்தில் கொண்டு கூடுதல் ரயில் இயக்குமா ரயில்வே?
சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு, ஜூலை மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இது சிம்புவின் கரியரில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ப்ரீ புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், ‘தக் லைஃப்’ படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடித்து வருகிறார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால், அந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் 6 மாத சம்பளத்தை போனஸாக இந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக, துபாயின் எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிறுவனங்களின் லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், எம்பி ஒருவர் தனது பதவிக்காலத்தில் காலமாகும்பட்சத்தில், அத்தொகுதியை அதிகாரப்பூர்வமாக காலியானது என அறிவிப்பது மக்களவை செயலகத்தின் கடமையாகும்.
Sorry, no posts matched your criteria.