India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே.எல்.ராகுல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். CSK, KKR, MI அணிகளுக்கு எதிரான போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்காத அவர், அணிக்கு திரும்பிய உடன் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியே எனக்குத் தெரியாது. அது முடிந்த பிறகு, வாடிவாசல் பட வேலைகள் இருக்கிறது. அதன் பிறகு தான், அடுத்து எந்தப் படம் என்பது எனக்குத் தெரியும். அதனால், ‘வடசென்னை 2’ எடுப்பேனா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறினார்.
ஆறு, குளம் போன்ற நீர்த்தடங்களில் காணப்படும் கொக்கு, கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் உட்கொள்வதில்லை. தனக்கு பிடித்த மீன் தண்ணீரில் வெளிப்படும் வரை பொறுமையாக காத்திருக்கும். அந்த மீன் வெளிப்பட்டதும் குறிவைத்து கொத்தி பிடித்து உட்கொள்ளும். மனிதர்களும் இதுபோல வாய்ப்புக்காக காத்திருந்து, அது கிடைத்ததும் சிறிதும் தாமதிக்காது பயன்படுத்த வேண்டும். இதுவே வாழ்வியல் வெற்றிக்கான ரகசியமாகும்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மீண்டும் அவர்களுக்கு ஜூன் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை வேலை நாட்களாக இருக்கும்.
அதிமுக ஊழல் கட்சி என சொல்வதற்கு அமித்ஷாவுக்கு தற்போது ஞானோதயம் வந்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர். வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம் எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. திமுக தலைமையிலான INDIA கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சோழ மற்றும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. இங்கிருக்கும் இறைவன் வடாரண்யேஸ்வரர், அம்பாள் வண்டார்குழலி என்று வணங்கப்படுகின்றனர். காரைக்கால் அம்மையாருக்கு, நடராஜராக சிவபெருமான் காட்சி தந்த ஸ்தலம் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம். இங்கு மனமுருகி வழிபட்டால், திருமணத் தடை, சனிக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரசாத் முருகன் இயக்கத்தில், பரத் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time In Madras) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. ஹைப்பர் லிங்க் கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், ராஜஸ்தான் 15 ஆட்டத்திலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
நாட்டில் எங்கேயும் மோடி அலை இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ‘Abki baar 400-paar’, என்ற பாஜகவின் முழக்கம் குறித்து பேசிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என்பதால் தான், உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருவதாக சாடினார். மேலும், I.N.D.I.A கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமைகளை திமுகவும், காங்கிரஸும் விற்றுவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கச்சத்தீவு உரிமை பறிபோனது, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும் என்று கூறினார். கச்சத்தீவில் மீனவர் உரிமையை திமுக, காங்கிரஸ் விற்றதை அம்பலப்படுத்தவே ஆர்டிஐ தகவலை பாஜக வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.