India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின்சார கார் பேட்டரி, சோலார் சாதன தயாரிப்புக்கு பயன்படும் கோபால்ட், நிக்கல், காப்பர், மேங்கனிஸ் கனிமங்களுக்கு, பிரிட்டன், சீனா, நார்வேயையே இந்தியா தற்போது அதிகம் சார்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய இந்திய பெருங்கடலுக்கு அடியே கோபால்ட் உள்பட 380 மில்லியன் டன் கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், சர்வதேச ஆழ்கடல் ஆணையத்திடம் உரிமம் பெற்று 2 இடங்களில் தேடுதல் வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இந்திய வம்சாவளியினரான சுந்தர் பிச்சை 2015 முதல் இருந்து வருகிறார். அவர் அண்மையில் பிரபல யூடியூப்பருக்கு அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த 3 இந்திய உணவுகள் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார். பெங்களூரு செல்லும் பட்சத்தில் தோசையை விரும்பி சாப்பிடுவேன் என்றும், டெல்லியில் சோலே பாதுரி உணவும், மும்பையில் பாவ் பாஜியும் சாப்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
குரு பகவான் அண்மையில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த இடப்பெயர்வு தனுசு, துலாம், மீன ராசிகளுக்கு தீமையாக அமையும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்கு சில நல்ல பழக்கவழக்கங்கள் அவசியம். இதனை ஜப்பான் மக்கள் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் சில வாழ்க்கை முறைகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை, *அந்தந்த சீசனில் கிடைக்ககூடிய உணவு பொருட்களை உண்ணுதல், *கிரீன் டீ பருகுதல், *உடற்பயிற்சி செய்தல், *தேவையான நீர் பருகுதல், *சரியான நேரத்திற்கு உறங்குவது, *தொடர்ந்து கற்றல் போன்றவை ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் வரை அவகாசம் உள்ளதால், நாளை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இத்தேர்வுக்கு, 41,485 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 9 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. எழுத்து முறையில் நடைபெற்ற இத்தேர்வில் 40,136 பேர் பங்கேற்றனர். முடிவுகளை <
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற CSK 219 ரன்கள் என்ற இலக்கை அடைய வேண்டும் அல்லது 201 ரன்கள் எடுத்தாலே போதும். இதை செய்யாத பட்சத்தில், CSK அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தவறவிடும். அதே சமயம், CSK அணியை 201 ரன்களுக்குள் (18 ரன்கள் வித்தியாசத்தில்) சுருட்டும் பட்சத்தில் RCB அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
CSK-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் RCB அணி, நாலாபக்கமும் சிக்சர் மழையை பொழிந்து வருகிறது. இதனால் ஒரு ஐபிஎல் சீசனில் 150 சிக்சர்களை பறக்க விட்ட முதல் அணி என்ற புதிய சாதனையை RCB அணி படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு அணியும் 150 சிக்சர்கள் அடித்ததில்லை. SRH- 146, DC- 135, MI- 133 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலகில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததால், ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 5 முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 25,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் முகக்கவசம் அணியும்படி மக்களுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.