India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வர் ஸ்டாலின் வியூகம் மோடி, அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது என்று விசிக தலைவர் திருமா தெரிவித்துள்ளார். தமிழ் பிடிக்கும் இட்லி பிடிக்கும் என்ற மோடியின் நாடகம் திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே; ஆனால், திமுக தேர்தல் நேரக் கட்சியல்ல, தமிழ் இனத்தின் காப்பாளர், தேசத்தை காப்பாற்றும் கட்சி. மோடியின் வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாக விமர்சித்தார்.
தேர்தலுக்கு முந்தைய நாள் (ஏப்.18) அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்.19 (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், ஏப்.17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேர நெரிசலை தவிர்க்க www.tnstc.in தளத்தில் தற்போதே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது, தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக தினகரனே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்; திமுக குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்றால் தேனியில் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், திமுகவினர் தரும் பணம் கஞ்சா விற்ற பணம்; அதை வேண்டாம் என்று சொல்லுங்கள். அதை வாங்கினால் மிகப்பெரிய பாவம் என்று தெரிவித்தார்.
ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தீபாவளியையொட்டி, அக்டோபர் இறுதியில் இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே, படத்தின் டீசர் நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் விதிகளை மீறியதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி இ.பி.சாலையில் விதிகளை மீறி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் துரை வைகோ, மனோகர் உள்ளிட்டோர் மீதும் நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய புகாரில் பாஜக பிரமுகர் மருது பாண்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். அதிரடியாக விளையாடிய அவர், 24 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் (2028) 3,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவரைத் தொடர்ந்து யூசுப் பதான் (2062), சூர்யகுமார் யாதவ் (2130), சுரேஷ் ரெய்னா (2135) ஆகியோர் உள்ளனர்.
திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் , அற்ப காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாளில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் திமுக, அதிமுக வாக்குக்கு தரும் ₹500, ₹1000 வாங்கிக் கொண்டு ஏமாற வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேசிய கட்சிகள் இல்லை என்பதால், அதிமுகவுக்கு உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றார். பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.
சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதன்பின், ‘டான்’ பட இயக்குநர் சிபி உடன் இணையும் அவர், பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
2024 உலக பல்கலைக்கழக தர வரிசையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 40 இடங்கள் முன்னேறியிருப்பது மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடந்த ஆண்டில் 289ஆவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இருந்தது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் சிறந்த செயல்பாடு உள்ளிட்டவற்றை வைத்து 249ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் 9 இடங்கள் பின்தள்ளப்பட்டு 77ஆவது இடத்தை பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.