India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதை அறிய இந்தியா மட்டுமல்லாது உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜக 25% வாக்குகளை நிச்சயம் பெற்று கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேரு மறைவுக்கு பிறகு பிரதமராகும் வாய்ப்பு 2 முறை கிடைத்தும், சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருக்கு அந்த வாய்ப்பை அளித்ததால் கிங் மேக்கர் என அழைக்கப்பட்ட கர்ம வீரர் காமராஜர், இதே தினத்தில் தான் (1954 ஏப்.13) தமிழக முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். பின்னர் 1963 அக். 2 வரை 3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்தார். காங்கிரசை வலுப்படுத்த முதல்வர் பதவியை அவரே ராஜினாமா செய்தார்.
நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவின் விருப்பத்திற்கு இணங்க, சென்னை கொரட்டூரில் சாய் பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அண்மையில் இக்கோயிலில் விஜய் தரிசனம் மேற்கொண்ட புகைப்படமும் வெளியானது. இந்நிலையில், விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சென்றுள்ளார். அவருடன் விஜய்யின் தாயார் ஷோபாவும் உடன் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பதிவில், 2016ல் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் 9 ஆண்டுகளாகியும் ஏன் கட்டப்படவில்லை? 10 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழகத்தில் ஏன் ஒரு முதன்மை கல்வி நிறுவனத்தை கூட மோடி அரசு அமைக்கவில்லை? சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் குமரி, தமிழிசை செளந்தரராஜன் தென் சென்னை, எல்.முருகன் நீலகிரி, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த 5 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரமாக பணியாற்றுகிறது.
₹50 கோடி தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ஒரே ஆண்டில் தமது அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார். காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ₹50 கோடி தருவதாக பாஜக பேசியதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும் சித்தராமையா குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது நீங்கள் அடையும் வெற்றியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், என்னை விட அழகான மற்றும் திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இந்த சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருப்பேன் எனக் கூறினார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1,000-லிருந்து ரூ.1,500ஆகவும், ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ.600க்கும், கனகாம்பரம் மற்றும் முல்லைப்பூ கிலோ ரூ.700, செவ்வந்திப்பூ ரூ.450, அரளி மற்றும் சம்பங்கி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2024 CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு, மார்ச் 11 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 4.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். மாணவர்கள் <
2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து 2019 தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. கடந்த 2 தேர்தல் முடிவுகளை காண்கையில் அதிமுக, திமுக கூட்டணி மாறிமாறி அமோக வெற்றி பெற்றது தெரியும். இந்தத் தேர்தலில், அதே வரலாறு திரும்புமா என்பதை மக்களே அறிவர்.
Sorry, no posts matched your criteria.