India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகிச் செல்லும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், தமிழக அரசு உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னாவின் சிபாரிசில்தான் தனக்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 2008இல் இந்திய எமர்ஜிங் அணியில் ஆடியபோது, ரிசர்வ் வீரராக இருந்த தன்னை, ரெய்னாதான் NZ அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறக்க வைத்தார் எனக் கூறிய கோலி, அந்தப் போட்டியில் சதம் அடித்த பின்னர்தான் தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்தது எனத் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக பணத்தை அனுப்புவதும், பிறகு அவர்களிடம் இருந்து மீட்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போது, உத்தர பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தை சேர்ந்த விவசாயின் கிசான் வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,900 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தனது பரோடா உ.பி. வங்கிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரது வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
மோடி 3ஆவது முறையாக பிரதமரானால், 6 மாதங்களில் இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைக்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலே பகுதியில் பிரசாரம் செய்த அவர், பாகிஸ்தானின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும் தெரிவித்தார். பாஜகவை பொறுத்தமட்டில் தேசத்திற்குதான் முக்கியத்துவம் என்றும் அவர் கூறினார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு பல ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், சிலம்பம் சுற்றக் கற்றுக் கொண்டார். படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலம்பம் சுற்றும் பயிற்சியை கைவிடாத அவர், தனது பக்கத்து வீட்டுத் தோழியுடன் மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இரவுப் பணி முடிந்து புறப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர். கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரேதபரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
*குலோப் ஜாமூனை ஆற வைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்தால் உடைந்து போகாது. *முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம். *கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளை சேர்த்தால் வண்டு வராது. *ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது 2 மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.
IPL தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் KKR அணி, இரண்டாம் இடம் பிடிக்கப் போகும் அணியை மே 21ஆம் தேதி Qualifier 1 போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கும் RCB அணி, 3ஆவது இடம் பிடிக்கப் போகும் அணியை மே 22ஆம் தேதி Eliminator போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. பின்னர், மே 24ஆம் தேதி Qualifier 1இல் தோற்ற அணியை Eliminatorஇல் வென்ற அணி எதிர்கொள்ளும்.
கேட்போரை மெய் மறக்கச் செய்யும் வசீகர குரலுக்கு சொந்தக்காரரான சித் ஸ்ரீராம் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடல் படத்தின் “அடியே…” பாடலை பாடி கவனம் ஈர்த்த இவர், “என்னோடு நீ இருந்தால்…” பாடல் மூலம் ரசிகர்களின் மனதைத் தொட்டார். “தள்ளிப்போகாதே…” பாடலால் பட்டித் தொட்டி எங்கும் பரவிய அவரது குரல், “மறுவார்த்தை பேசாதே…” போன்ற பாடல்களாக இளைஞர்களின் ரிங்டோனாக ஒலித்து வருகிறது.
பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி இன்று போராட்டம் அறிவித்துள்ளதால், டெல்லி போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து டெல்லி அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள் எனவும், தாங்களே பாஜக அலுவலகம் வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.