India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தரகாண்டின் பெரினாக் பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து 2019இல் புகார் எழுந்த நிலையில், அதன் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. தர சோதனையில் பதஞ்சலி நிறுவன சோன் பப்டி தரமற்றது என தெரியவந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் உதவி பொது மேலாளர், கடை உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களுக்கு உத்தரகாண்ட் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனையோடு அபராதமும் விதித்துள்ளது.
சாதி, மதம், மொழி பற்றி தேர்தல் பரப்புரை செய்வதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் வெறுப்பு பரப்புரையை பிரதமர் தொடங்கியுள்ளார் என விமர்சித்தார்.
NCA எனும் தேசிய கிரிக்கெட் அகாடமி, வீரர்கள் சிலரை அடுத்தகட்ட பயிற்சிக்காக தேர்வு செய்துள்ளது. ஷ்ரேயஸ், இஷான், முஷீர், மயங்க், உம்ரான், ஆவேஷ், குல்தீப் சென், ஹர்ஷித், கலீல், அசுடோஷ், தேஷ்பாண்டே, ரயான் பராக், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், படிக்கல், ப்ரித்திவி ஷா ஆகியோர் High Performance பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர். இதன் அடிப்படையில்தான் வீரர்கள் சர்வதேசப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை, இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்றும், படிப்படியாக அது நாடு முழுவதும் மழையைக் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பிரபலங்கள் பலரைப் பற்றி பேசி புயலைக் கிளப்பி வரும் RJ சுசித்ரா, விஜய் ஆண்டனி மகள் மீராவின் தற்கொலை பற்றியும் பேசியிருக்கிறார். விஜய் ஆண்டனியைப் போலவே மீராவும் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள விரும்பியதாகவும், அதனை விஜய் ஆண்டனி ஏற்கவில்லை என்றும் சுசித்ரா கூறியிருக்கிறார். இதனால், மனம் உடைந்துதான் மீரா தற்கொலை செய்துகொண்டார் என்று சுசித்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், 21 – 15, 21 -15 என்ற நேர் செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
மத்திய அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதாக ஆசை காட்டி அரசியல் கட்சிகளிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சுகள் அரைவேக்காட்டுத்தனமானது என்பது மக்களுக்கே தெரியும் என சாடிய அவர், அதிமுக உடன் கூட்டணி குறித்து பேசிய கட்சிகளை பாஜக கடத்திச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆரோக்கியமான உடலைக் கொண்ட எவராக இருந்தாலும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரே வழிதான் உண்டு. உடலில் கலோரி குறைபாட்டை ஏற்படுத்துவதுதான் அந்த வழி. அதற்கு நாம் செலவிடும் கலோரிகள், உட்கொள்ளும் கலோரிகளை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆகவே, தேவையான அளவு மட்டுமே சாப்பிட்டு, போதுமான காலம் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை குறையும். மற்ற முறைகள் அனைத்தும் ஏமாற்று வேலை.
வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ₹240, பீட்ரூட் ₹70, சின்ன வெங்காயம் ₹75, முட்டைகோஸ் ₹65, கேரட் ₹90, மிளகாய் ₹100, முருங்கைக்காய் ₹80, இஞ்சி ₹200 உருளைக்கிழங்கு ₹80, கத்தரிக்காய் ₹75, தக்காளி ₹48க்கு விற்பனையாகிறது. இதில், உச்சகட்டமாக பூண்டு கிலோ ₹400க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மதுரையில் 3 நாள்களில் 15 சிறார்கள் உட்பட 40 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வார்டுகளை உருவாக்கவும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. .
Sorry, no posts matched your criteria.