India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீங்கள் செய்யும் விஷயத்தில் நேர்மையாக இருந்தால் போதும், வெற்றி உங்களை தேடி வரும் என RCB வீரர் விராட் கோலி கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், கடின உழைப்பை செலுத்தி தாங்கள் இந்த வெற்றியை பெற்றிருப்பதாகவும், கடவுளிடம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், அடுத்த போட்டியில் கவனம் செலுத்த உள்ளதால், இப்போதைக்கு வேறு எதுவும் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதை யாராலும் மாற்ற முடியாது என்றும், அப்பகுதி பாஜகவால் மீட்டெடுக்கப்படும் என்றும் கூறினார். காஷ்மீருக்கு 70 ஆண்டுகளாய் காங்கிரஸ் அளித்த சிறப்பு அந்தஸ்தை மோடி ரத்து செய்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஊழல்வாதிகள் அனைவரையும் சிறையில் அடைப்பது உறுதி என்று மாேடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஜுன் 4ஆம் தேதிக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைத்ததும், அனைத்து ஊழல்வாதிகளும் சிறையில் தள்ளப்படுவார்கள், யாரும் வெளியில் இருக்க மாட்டார்கள் என்றார். திரிணாமுலை படுதோல்வியடைய செய்து, சந்தேஷ் காலி வன்கொடுமைக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, தேனியில் அதி கனமழையும், குமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரியில் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் கனமழையும் பெய்யும் என எச்சரித்துள்ளது.
இயக்குநர் ராஜமெளலி, ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் ‘SSMB28’படத்தை இயக்கவுள்ளார். இப்படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடப்பதாக அமைக்கப்படுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சி குறித்து ஒன்றுமே தெரியாது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிரசாரம் செய்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததெல்லாம் பொய் சொல்வது, மக்கள் பணத்தை பறிப்பது, இடஒதுக்கீட்டைப் பறிப்பது மட்டுமே என்றார். பாஜக குறித்து ‘I.N.D.I.A’ கூட்டணி தலைவர்கள் பொய் பிரசாரம் செய்வதாக கூறிய அவர், உண்மை நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார்.
இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெறவேண்டும். ஏற்கனெவே, ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 2-ம் கட்ட தேர்வு முடிவுகள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.முத்து என்ற மாணவர் 100 என்டிஏ மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கனமழை எதிரொலியால் 8 மாவட்டங்களில் 2 கோடி செல்போன் எண்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், தேனி, நீலகிரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; 15 கால்நடைகள் பலியாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், எங்களை அலுவலகத்தில் இருந்து விரட்டி தெருவுக்கு கொண்டுவருவதே பாஜகவினரின் நோக்கம் எனவும் குற்றம் சாட்டிய அவர், பாஜகவுக்கு போட்டியாக வளர்ந்து வருவதால், ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
இடுக்கி, பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அமராவதி அணைக்கு வரும் நீரைத்தடுக்க கேரள அரசு முயற்சிப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு திமுக அடகு வைப்பதாக விமர்சித்த அவர், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.