News May 19, 2024

மோடிக்கு எதிராக நடிகர் கிஷோர் கடும் விமர்சனம்

image

வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதராக இருக்கவும் தகுதியில்லாதவர் என்றும், தொடர்ந்து பொய்யையே திரும்பத் திரும்ப பேசி வருகிறார் என்றும், 10 ஆண்டுகால பணிகள் குறித்து பேசாமல் வெறுப்புணர்வை பரப்புவதாகவும் விமர்சித்துள்ளார்.

News May 19, 2024

புதிய சாதனை படைத்தார் அபிஷேக் ஷர்மா

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 5 Four, 6 Six என விளாசி அபாரமாக விளையாடி வருகிறார். இதனால், 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் (41 Six) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

News May 19, 2024

‘குட் பேட் அக்லி’ படத்தின் போஸ்டர் வெளியானது

image

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 1st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், அஜித் கேங்ஸ்டர் லுக்கில் இருப்பதால், அதிரடி ஆக்‌ஷன் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, கடந்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

News May 19, 2024

நெல் கொள்முதல் விலையை ₹3000ஆக உயர்த்த வேண்டும்

image

தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணத்தை அரசு ஆய்வு செய்யுமாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நுகர்பொருள் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் 10 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளதாகவும், விலை குறைவே இதற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டினார். அத்துடன், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ₹3,000 ஆக உயர்த்தவும் வலியுறுத்தினார்.

News May 19, 2024

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கேப்டனாக இருந்தவர் யார்?

image

2008இல் தொடங்கி ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 226 போட்டிகளுக்கு தோனி தலைமை தாங்கியுள்ளார். சிஎஸ்கே, ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதற்கடுத்து, அதிகபட்சமாக மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 158 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில்தான் 2 பேரும் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

News May 19, 2024

லெட்டர் பேட் கட்சியா த.வெ.க?

image

ரசிகர் மன்றம் மூலம் நற்பணிகளை செய்து வந்த விஜய், சில மாதத்துக்கு முன்பு த.வெ.க. எனும் கட்சியை ஆரம்பிப்பதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் குறித்த அறிவிப்பையும் அறிக்கை மூலம் தெரியப்படுத்தினார். மேலும், அவ்வப்போது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதை கண்ட எதிர்க்கட்சியினர், விஜய் லெட்டர் பேடில் அரசியல் கட்சி நடத்துகிறாரா? என கேட்கின்றனர். கவனிப்பாரா விஜய்?

News May 19, 2024

தோனி மீது அன்பை பொழிந்த ரசிகர்கள்

image

நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான தோனிக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். சென்னை, வான்கடே, சின்னசாமி, தரம்சாலா போன்ற அனைத்து மைதானங்களிலும், CSK மற்றும் தோனிக்கென்று தனி ரசிகர் படையே உள்ளது. ரசிகர்கள் காட்டும் அளவு கடந்த அன்பு தான், CSK அணியின் மிகப்பெரிய பலம். CSK அணி, இந்தாண்டு பிளே-ஆப்புக்கு முன்னேறவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதளவில் இடம்பிடித்துள்ளது.

News May 19, 2024

பீதியில் தென்மாவட்ட மக்கள்

image

கடந்த நவம்பர், டிசம்பரில் பருவமழை காலத்தில் பெய்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வானிலை மையம் தென்மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் மனதில் மீண்டும் பழைய மழை பாதிப்புகள் நிழலாடத் துவங்கியுள்ளன.

News May 19, 2024

சமாஜ்வாதி கட்சி மீது மாயாவதி குற்றச்சாட்டு

image

உத்தர பிரதேச மாநிலம் பாஸ்தியில் பகுஜன் சமாஜ் கட்சி பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்று பேசினார். அப்போது அவர், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, தலித்துகள், ஆதிவாசி மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாகவும், ஆதலால் அக்கட்சியை மன்னிக்கக் கூடாது, மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றார்.

News May 19, 2024

முதல் ஓவர் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் அவுட்

image

பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. டிராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிர்ச்சியளிக்கும் வகையில், அர்ஸ்தீப் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் போல்ட் ஆனார்.

error: Content is protected !!