India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹோர்முஸ் கடற்பகுதியில் ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் தொடர்புடைய சரக்குக் கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 பேர் சிக்கியுள்ளனர். கண்டெய்னர் நிறுவனமான MSC வெளியிட்ட அறிக்கையில், ஹெலிகாப்டர் மூலம் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஈரான் கடற்பகுதியை நோக்கி கொண்டுச் செல்லப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, 17 இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஈரானுடன் இந்தியா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான அவர், ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், அவர் மும்பையில் 4,000 சதுர அடியில் புதிய வீடு வாங்கி குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்கரையை பார்த்தபடி கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பின் மதிப்பு ₹45 கோடி எனக் கூறப்படுகிறது.
இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ராபர்டோ கவாலி 83ஆவது வயதில் நேற்று காலமானார். இந்நிலையில், அவரது ஆடை வடிவமைப்புகள் தற்போது வைரலாகின்றன. இதில் 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை முதலிடம் பிடித்துள்ளது. 2019 கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை 2ஆவது இடமும், 2007 கிராமி விருது விழாவில் அமெரிக்க பாடகி பியோன்ஸ் அணிந்து வந்த ஆடை 3ஆவது இடம் பிடித்துள்ளன.
சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RR கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து PBKS அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் RR முதல் இடத்திலும், 2 வெற்றி, 3 தோல்வியுடன் PBKS 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சரக்குக் கப்பலை ஹோர்முஸ் கடற்பகுதியில் ஈரான் கடற்படை அதிரடியாக சிறைப்பிடித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை, ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் மடக்கி சிறைப்பிடித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுவதாக AAP எம்பி சஞ்சய் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உத்தரவின் பெயரில் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுகிறார். அவரது மன உறுதியை சிதைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி அறிவித்துள்ளது. ஓவைசி தனது X பக்கத்தில், “மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு AIMIM ஆதரவளிக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்” என பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம், தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது ஓவைசி கட்சியும் இணைந்துள்ளது.
மோடி தலைமையிலான ஆட்சியில் ஐஐடி மாணவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தராகண்டில் பிரசாரம் செய்த அவர், பாஜக ஆட்சி வேலையில்லா திண்டாட்டத்தை மட்டுமே நாட்டிற்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, துறைமுகங்கள் என அனைத்தையும் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு, 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸை குறை கூறுவதாக தெரிவித்தார்.
அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் காற்றுடன் கலந்துபோவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு காணாமல் போவது யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுகவுக்கு பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் வெயில் காரணமாக மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை மே 1 – ஜூன் 30ஆம் தேதி வரை கட்டாயம் இயக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் கேஸ் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் இருந்தது. இந்த கோடைகாலத்தில் இந்தியாவின் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகாவாட்டாக இருக்கும் என அரசு கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.