News May 19, 2024

அதிர்ஷ்ட மழை கொட்டப் போகும் ராசிகள்

image

ஜூன் 12 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் சுக்கிரன் இடம்பெயர உள்ளார். இதனால் ரிஷபம், கடகம், மகர ராசியினருக்கு நேரம் சாதகமாக இருக்கும். இந்த சமயத்தில் தொழில் தொடர்பான விஷயங்களில் மிகப்பெரிய ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிதி ஆதாயங்கள் ஏற்படும். மேலும், வருமான ஆதாரங்களும் எளிதாக அதிகரிக்கலாம். மன மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உடல்நலக் கோளாறுகளிலிருந்து விடுபடுவீர்கள். செலவுகள் வரும் என்பதால் கவனமாக இருக்கவும்.

News May 19, 2024

IPL: மழையால் போட்டி ரத்து

image

KKR-RR இடையேயான ஐபிஎல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. விடாமல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், 10.30 மணிக்கு மழை நின்றது. அப்போது, 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு, டாஸ் போடப்பட்டது. பின்னர், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால், போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

News May 19, 2024

49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு 49 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உ.பி- 14, மகாராஷ்டிரா-13, மேற்குவங்கம்- 7, பிஹார்- 5, ஒடிசா- 5, ஜார்க்கண்ட்- 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்துடன், ஒடிசாவில் 35 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது.

News May 19, 2024

புயலுக்கு பெயர் வைக்கும் முறை (1)

image

உலகம் முழுவதும் வரும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையமே பெயர் வைக்கிறது. அந்த பெயர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் வானிலை அமைப்பு பரிந்துரைக்கும். அதுபோல, இந்திய பெருங்கடல், வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்திய வானிலை மையம் பரிந்துரைக்கும். அதற்கு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளை கொண்ட WMO/ESCAP குழு பெயர் தேர்வு செய்து அளிக்கும்.

News May 19, 2024

புயலுக்கு பெயர் வைக்கும் முறை (2)

image

இந்திய வானிலை மையம் பரிந்துரைக்கும் பெயர்களை இப்பகுதியில் உருவாகும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் சூட்டும். அப்போது இதற்கென கடைபிடிக்கப்படும் வழிகாட்டுதல்களை பின்பற்றி, மத நம்பிக்கை, கலாச்சாரம், பாலினம், அரசியலுக்கு நடுநிலையாகவும், மக்களின் உணர்வுகளை காயபடுத்தாதபடியும், எளிதில் உச்சரிக்கும் வகையிலும், அதிகபட்சம் 8 எழுத்து கொண்ட வார்த்தையாகவும் தேர்வு செய்து சூட்டும்.

News May 19, 2024

புயலுக்கு பெயர் வைக்கும் முறை (3)

image

ஒரு முறை புயலுக்கு வைத்த பெயர், திருப்பி வேறு புயலுக்கு வைக்கப்படும் நடைமுறை இல்லை. அத்துடன் அந்த வார்த்தையை சர்வதேச வானிலை மையம் நீக்கிவிடும். கடந்த 2020ஆம் ஆண்டில், இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக் கடலில் அடுத்து உருவாகவுள்ள புயல்களுக்கான 169 பெயர்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டு விட்டன. அதிலிருந்தே இனி உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கப்படும்.

News May 19, 2024

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளது. ஏற்கெனவே, மதுரை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் அங்கு சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன.

News May 19, 2024

புதிய சாதனை படைத்தார் அபிஷேக் ஷர்மா

image

PBKS-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், SRH வீரர் அபிஷேக் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அதிரடியாக விளையாடி வந்த அவர் 5 Four, 6 Six என விளாசி அசத்தினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் (41 Six) அடித்த வீரர் என்ற பெருமையை அடைந்ததோடு, முதலிடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். மொத்தமாக 66(28) ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார்.

News May 19, 2024

அதிக மீட்டர் தூரம் சிக்சர் அடித்தவர்கள்

image

▶தோனி- 110 மீட்டர் vs பெங்களூரு
▶தினேஷ் கார்த்திக்- 108 மீட்டர் vs ஹைதராபாத்
▶ஹென்ரிக் க்ளாஸன்- 106 மீட்டர் vs பெங்களூரு
▶வெங்கடேஷ் ஐயர்- 106 மீட்டர் vs பெங்களூரு
▶நிகோலஸ் பூரன்- 106 மீட்டர் vs பெங்களூரு
▶ஹெட்மயர்- 106 மீட்டர் vs ஹைதராபாத்
▶இஷான் கிஷன்- 103 மீட்டர் vs ஹைதராபாத்
▶ஆண்ரே ரஸல்- 102 மீட்டர் vs ஹைதராபாத்
▶தோனி- 101 மீட்டர் vs லக்னோ
▶ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்- 101மீட்டர் vs மும்பை

News May 19, 2024

ஈரான் அதிபரை தேடும் பணி தீவிரம்

image

விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெறுகிறது. அஜர்பைஜான் கிழக்குப் பகுதியில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியுள்ளது. இதுதவிர வேறு தகவல் எதுவும் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை தேடும் பணி தாமதமடைவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!