India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக அரசு குறித்து சந்திரசேகர ராவ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏதாவது நல்லது நடந்துள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், பெட்ரோல், டீசல் விலை என்ன? என்றார். பாஜகவில் இணைகிறாயா? சிறைக்கு செல்கிறாயா எனக் கேட்கிறார்கள். மோடியா? ED-யா? என்பதுதான் அரசியலா? நாடு எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பாரதம் சனாதனத்தால் கட்டமைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சனாதனம் வீழ்ந்தால் பாரதமும் வீழும் என்றார். உலக நாடுகளில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் பாரதம் பொருளாதார வளர்ச்சியோடு முன்னேறி வருகிறது எனத் தெரிவித்தார். சனாதனம் குறித்த பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தனக்கென தனி பாணியை வடிவமைத்துக் கொண்டவர்களில் இயக்குநர் பாலாவும் ஒருவர். அனைத்து காட்சிகளும் சரியாக வர வேண்டும் என்பதற்காக மெனக்கெடும் இவர், நடிகர்களையும் பாடாதபாடு படுத்திவிடுவார். இதன் காரணமாகவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும் கூறப்படுகிறது. அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பை தொடர்ந்த பாலா, தற்போது நிறைவு செய்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் கைசர்கஞ்ச் தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அங்கு மீண்டும் சீட் கேட்டு அடம்பிடித்து வரும் பிரிஜ் பூஷண் சிங், காத்ரா தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு 25 முதல் 30 வாகனங்கள் புடைசூழ அனுமதியின்றி பயணித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அரசு தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரியில் திமுக வெல்வது அவ்வளவு எளிதல்ல என திமுக எம்.பி செந்தில்குமார் ஆருடம் தெரிவித்துள்ளார். தனியார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தலில் ஒருவேளை வன்னியர் சமூகத்தின் 80% வாக்குகளை பாமக பெறும்பட்சத்தில் பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் வாக்குகளை திமுக முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், அதிமுக தனி அணியாக நிற்கும் போது இது சாத்தியமாகுமா என தெரியவில்லை” என்றார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <
மோடி ஏன் பதற்றமடைகிறார் என காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி மீண்டும் மீண்டும் ராஜஸ்தான் வருவதாக தெரிவித்த அவர், 400 தொகுதிகளை வெல்வோம் எனக் கூறிவிட்டு பதற்றம் ஏன் என்றார். மக்களை பிளவுபடுத்துகிறார்கள், தன்னாட்சி அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களை பாஜகவில் இணைக்கிறார்கள். 400 தொகுதிகளை வெல்ல வேறென்ன வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், விஜய்யின் தவெக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. MLA புகழேந்தி சமீபத்தில் காலமானதால், அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த விஜய், இடைத்தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமே இந்த ஏற்பாடு என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 147/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த PBKS அணியில் ஜிதேஷ் ஷர்மா 29, அஷுதோஷ் ஷர்மா 31 ரன்கள் அடித்தனர். RR தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் 2, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து RR அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.