India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, தோராயமாக 10.28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பிஹார் – 8.86%, ஜம்மு காஷ்மீர் – 7.63%, ஜார்கண்ட் – 11.68%, லடாக் – 10.51%, மகாராஷ்டிரா – 6.33%, ஒடிஷா – 6.87%, மேற்கு வங்கம் – 15.35% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். போர் நடைபெற்று வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. காஸாவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்ததால், அது பிடிக்காத யாரோ செய்த சதியால் விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதனால், #Mossad என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹55,200க்கும், ₹50 உயர்ந்து ₹6,900-க்கும் விற்பனையாகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி கிராம் ₹6,890-க்கு விற்பனையானது அதிகபட்ச விலையாக இருந்த நிலையில், இன்று ₹6,900க்கு விற்பனையாகிறது.
நாடு முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 21 பல்கலைக்கழகங்கள் போலி என அறிவிக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ள <
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பழமைவாத கருத்துக்களைக் கொண்ட மத குருவாகக் கருதப்படுபவர். 63 வயதான அவர், 25 வயதில் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார். பின்னர் வழக்கறிஞர் ஜெனரல் உள்ளிட்ட நீதித்துறையின் சக்திவாய்ந்த பதவிகளை வகித்துள்ளார். 2017 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்த ரைசி, ஜூன் 2021இல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வந்தார்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆகியவற்றிற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகங்களை வேறு நாளுக்கு தள்ளி வைக்குமாறு வர்த்தகர்களுக்கு பங்குச்சந்தைகள் அறிவுறுத்தியுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மதியம் 3.15 மணி வரை பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறும்.
மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோ தொகுதியில் உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி, மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் வாக்களித்தார். அதேபோல, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அக்ஷய் குமார், நடிகைகள் சான்யா மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் உள்ளிட்டோர் ஜனநாயக கடைமையாற்றினர்.
அரை லிட்டர் பாலில் ஏலக்காயை போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவைக்க வேண்டும். முந்திரி பருப்பை 2 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து, நன்கு அரைக்க வேண்டும். ஆறவைத்த பாலுடன் முந்திரி, பிஸ்தா விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். தேன், குங்குமப்பூ, சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, குளிர வைத்தால் சுவையான கேஷிவ் மில்க் ரெடி.
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் கைது செய்யப்பட்டதற்கு AAP கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஸ்வாதி, அன்று பாதிக்கப்பட்ட நிர்பயாவுக்காக வீதிக்கு வந்த ஆம் ஆத்மியினர், இன்று சிசிடிவியை மறைத்த குற்றவாளியைக் காப்பாற்ற வீதிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார். மணீஷ் சிசோடியா இருந்திருந்தால் தனக்கு இவ்வளவு மோசமாக நடந்திருக்காது எனத் தெரிவித்தார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அரசு தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. மூடுபனி காரணமாக ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.