India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூரில் நேற்று இரவு முழுவதும் பண்ணை வீட்டில் பார்ட்டி நடந்தது. இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்தில் அதிகாலை 3 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் சிக்கியுள்ளன. இந்த பார்ட்டியில் நட்சத்திரங்கள், 25 இளம்பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்திய ரைசியின் பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூரப்படும் என்றும், துயரமான இத்தருணத்தில் அவரது குடும்பத்தார் மற்றும் ஈரான் மக்களுடன் இந்தியா துணை நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
RCB-RR இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி, நாளை மறுநாள் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். இதுவரை, மே மாதத்தில் நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் RCB அணி தோற்றதும் இல்லை, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதும் இல்லை. இதனால், எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 12 செ.மீ., மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை தல்லாக்குளத்தில் 11 செ.மீ., திருச்சி மாவட்டம் புல்லம்பாடியில் 10 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் & அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை ஆகிய பகுதிகளில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் சார்லசை விட அதிகமாகும். 2024ஆம் ஆண்டுக்கான கணக்கீட்டின்படி, ரிஷி சுனக் குடும்பத்தின் சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்டு (₹6,800 கோடி). மன்னர் சார்லசின் சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்டு (₹6,435 கோடி). ரிஷி சுனக் குடும்பத்திடம் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 3 Four, 4 Six விளாசிய அவர், 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ரோஹித் ஷர்மா-8,008, ஷிகர் தவான்-7,626, சுரேஷ் ரெய்னா-6,553, ராபின் உத்தப்பா-6,434 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு அரசியலமைப்பின்படி 50 நாள்களுக்குள் புதிய அதிபரை தேர்தெடுக்க வேண்டும். இதனால், முஹம்மது முக்பரின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, நாளை சென்னையில் தொடங்க உள்ளது. 17 நாள்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா உள்ளிட்டோர் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வருவதால், படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ₹101க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ₹97.50க்கு விற்பனையான நிலையில், இன்று ₹3.50 உயர்ந்து ₹101க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹10 (கிலோ ₹10,000) உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இதுகுறித்து அவரது தந்தை தயாள் கூறுகையில், “யாஷை பெங்களூரு அணி ₹5 கோடிக்கு வாங்கியபோது அவர்கள் பணத்தை குப்பையில் போடுவதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தற்போது அவர்களே தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்” என்று பெருமிதப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.