India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இதில் கச்சத்தீவை மீட்பது தொடர்பான வாக்குறுதி இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ரோகித் ஷர்மா CSK அணிக்காக விளையாடுவார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “CSK அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் ஷர்மாவை CSK அணியின் கேப்டனாக பார்க்கலாம். தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா இருப்பார்” எனக் கூறினார்.
✍மனதை அடக்க நினைத்தால் அடங்காது; அதை அறிய நினைத்தால் அடங்கும். ✍தவறு செய்வதும் மனம் தான்; இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான். ✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. ✍உண்மையைச் சொல்! அது உனது மரியாதையை பாதுகாக்கும். ✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். ✍சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன.
*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் – ராகுல் காந்தி
*வாக்குகளைப் பெறு; வாக்களித்தோரை மற என்பது காங்கிரஸின் கொள்கை – ஜெ.பி.நட்டா
*இஸ்ரேல் மீதான போர் நடவடிக்கையை ஈரான் தொடங்கியது.
*ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா மீண்டும் தேர்வு.
*ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் ராதிகா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
நடிகர் யோகி பாபு நடிக்க உள்ள அடுத்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்தப் படமும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து தான் நடிக்கவுள்ள படங்களைத் தேர்வு செய்வதில் அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். இயக்குநர் சிம்புதேவனின் ‘போட்’ தனக்கு கைகொடுக்கும் என யோகி பாபு நம்புகிறார்.
தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகனப் பேரணி மூலம் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “DMK என்றழைக்கப்படும் திமுக, DRUG முன்னேற்றக் கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட, தேர்தலில் மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
▶ஏப்ரல் – 14 | சித்திரை – 01
▶கிழமை: ஞாயிறு ▶திதி: சூன்ய
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:45 – 04:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: இரவு 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மாலை 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
▶சந்திராஷ்டமம்: சுவாதி
ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டில் பல ஆண்டு காலமாக நிலவிவரும் வறுமையை ஒழிக்க நடக்கவிருக்கும் தேர்தல் ஒரு வரலாற்று வாய்ப்பு என சீமான் கூறியுள்ளார். திருச்சி பிரசாரத்தில் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள ஏழை எளிய பாமர மக்களும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது. இந்நிலை இனியும் தொடரக் கூடாது. மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முன்வர வேண்டும்” எனக் கூறினார்.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலை ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.