News May 20, 2024

ரயிலில் அபாய சங்கிலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?

image

அபாய சங்கிலியை அவசர காலத்தில் பிடித்திழுத்து ரயிலை நிறுத்த ரயில்வே விதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்கெல்லாம் அதை பயன்படுத்தலாம் தெரியுமா? 1) மருத்துவ உதவி தேவைப்படும்போது 2) பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுகையில் 3) விபத்தை தவிர்ப்பதற்கு 4) ரயிலில் பயணிக்கும் குழந்தை, வயதானோர், மாற்றுத் திறனாளிகள், வாழ்க்கைத் துணையை காணவில்லையெனில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம்.

News May 20, 2024

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொட்டுக்காளி’

image

டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிற்கு, சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேர்வாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பி.எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், ரிலீசுக்கு முன்பு பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. ‘பெர்லின்’ திரைப்பட விழாவில், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்தது.

News May 20, 2024

அமைச்சர் ரகுபதியால் அதிமுகவில் குழப்பம்

image

செங்கோட்டையன் விரைவில் அதிமுக பொதுச் செயலாளராக போவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்மையில் தெரிவித்திருந்தார். திமுகவில் சேரும் முன்பு அதிமுகவில் ரகுபதி இருந்ததால், அவரது இந்த பேட்டியில் உண்மை இருக்குமோ என்ற குழப்பம் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. இதையடுத்தே ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றோர், இபிஎஸ் தலைமையில் அதிமுக ஒற்றுமையாகவும், வலுவாகவும் இருப்பதாக பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.

News May 20, 2024

ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்

image

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். அந்தவகையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, சுகானா கான், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

News May 20, 2024

5 மணி நிலவரப்படி 56.68% வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 56.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 73.00% வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 48.66% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பிஹார் – 52.35%, ஜம்மு காஷ்மீர் – 54.21%, ஜார்கண்ட் – 61.90%, லடாக் – 67.15%, ஒடிஷா – 60.55%, உ.பி. – 55.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News May 20, 2024

ரூ.1,000 கோடி வசூலித்த மலையாள சினிமா

image

இந்தாண்டு வெளியான பெரும்பாலன மலையாளப் படங்களுக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. மஞ்சுமெல் பாய்ஸ்- ரூ.241 கோடியும், ஆடுஜீவிதம், பிரேமலு, ஆவேஷம் ஆகிய 3 படங்கள் தலா ரூ.100 கோடிக்கும் மேலும் வசூலித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை (139 நாள்கள்), உலகம் முழுவதும் மலையாளப் திரைப்படங்கள் மொத்தமாக ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களுக்கு பிடித்தப் படம் எது?

News May 20, 2024

சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்

image

சவுக்கு சங்கரை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவையில் இருந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் மதுரைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதில், 7 நாள்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 2 நாள்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

News May 20, 2024

5ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு

image

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், மக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி வரை 56% வாக்குகள் பதிவாகியிருந்தது. 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மே 25இல் நடைபெறவுள்ளது.

News May 20, 2024

நாடு முழுவதும் நாளை துக்கம் அனுசரிப்பு

image

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், நாளை ஒருநாள் மட்டும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் நாளை நடத்தப்பட இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

புயலுக்கு முதலில் எப்படி பெயரிடப்பட்டது தெரியுமா?

image

புயல் என்ற வார்த்தையானது, கிரேக்க வார்த்தையான சைக்ளோஸ் என்பதிலிருந்து உருவானது ஆகும். 1800களில் புயலுக்கு கத்தோலிக்க மதத் தலைவர்களின் பெயர்கள் வைக்கும் பழக்கம் இருந்தது. 1953க்கு பிறகு புயலுக்கு பெண்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. பிறகு 1979இல் ஆண்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மணிக்கு 62 கி.மீ.க்கும் மேல் வேகத்தில் புயல் வீசினால், அதற்கு சிறப்பு பெயர் வைக்கும் நடைமுறை தற்போது உள்ளது.

error: Content is protected !!