India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற சீனியர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “சீனியர் வீரர்கள் விளையாடுவதற்கான நேரத்தை போதுமான அளவு பெற்றுவிட்டனர்.
மறுபுறம் இளம் வீரர்கள் முழு திறமையுடன் காத்திருக்கின்றனர். இந்தமுறையும் இந்தியா கோப்பையை வெல்வது கடினம்” எனக் கூறினார்.
சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன குழந்தையை ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க காவல்துறை முயற்சி எடுத்துள்ளது. 2011இல் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை கவிதா (2) காணாமல் போனது. ஆண்டுகள் கடந்து ஓடினாலும் குழந்தையை தேடுவதை குடும்பத்தினர் நிறுத்தவில்லை. ஏ.ஐ. உதவியுடன் கவிதாவின் படத்தை 14 வயது தோற்றத்தில் வடிவமைத்த போலீசார் போஸ்டராக வெளியிட்டு சிறுமியை தேடி வருகின்றனர்.
2023-24 நிதியாண்டில் உலகின் முன்னணி ஸ்டீல் சக்கரம் & ஹைட்ராலிக் சிலிண்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான வீல்ஸ் இந்தியாவின் ஒருங்கிணைந்த வருவாய் ₹4,619 கோடியாக உயர்ந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ₹4,345 கோடியாக இருந்த வருவாய் தற்போது 6.3 % உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 64% உயர்ந்து, ₹36.8 கோடியாக உள்ளது.
க்ரீன் டீயுடன் ஒப்பிடும்போது, அஸ்வகந்தா ஓமம் டீ 100 மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த அஸ்வகந்தா டீயை எப்படி தயார் செய்வது எனப் பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் அஸ்வகந்தா, துளசி, குர்மர், இஞ்சி சேர்த்து நீரூற்றி 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், மன அழுத்தம் நீங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
எம்ஜிஆர் திரைப்படம் & தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய ஜூன் 5ஆம் தேதி வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க ஜூன் 10ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்பெற இந்த செய்தியை பகிருங்கள்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை டி20 அணிக்கு தேர்வு செய்யலாம் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “இந்திய அணியில் சேருவதற்கான குறுக்கு வழியாக ஐபிஎல் இருக்கக் கூடாது. முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் டெஸ்ட் அணிக்கும், விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடும் ODI அணிக்கும் தேர்வு செய்யப்பட வேண்டும்” எனக் கூறினார்.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் யாஷ், ரன்பீர் கபூர் & சாய்பல்லவி நடிப்பில் உருவாகிவரும் ராமாயணம் படம் மூன்று பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமாயணம் படக்குழுவிடம் இருந்து இந்த நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாக டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் பாகத்தில் ராமரின் திருக்கல்யாணம், 2ஆம் பாகத்தில் வனப்பிரவேசம், 3ஆம் பாகத்தில் ராவணவதம் கதைக்களமாக இருக்குமெனக் கூறப்படுகிறது.
➤சர்வதேச உரையாடல் & பண்பாட்டு பன்முகத்தன்மைக்கான தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ➤996 – ரோமப் பேரரசின் மன்னனாக 3ஆம் ஓட்டோ முடிசூடினார். ➤1780 – சீர்திருத்தவாதி எலிசபெத் ஃபிரை பிறந்த நாள். ➤1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. ➤1904 – பாரிஸில் கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) தொடங்கப்பட்டது. ➤1991 – ராஜீவ் காந்தி மறைந்த நாள். ➤2003 – பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.
மே மாத இறுதிக்குள் ₹1 லட்சம் கோடி ஈவுத்தொகையை அரசு கருவூலத்திற்கு ஆர்.பி.ஐ., அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கருவூல மசோதா மூலம் அரசு கடன் வாங்குவதை பெருமளவில் குறைத்த ஆர்.பி.ஐ., இந்திய அரசின் கடன் மேலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு வாங்கிய ₹60,000 கோடியை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த தயாராகி வருகிறது. கடந்தாண்டு கருவூலத்திற்கு ₹87,400 கோடியை ஆர்.பி.ஐ., வழங்கியுள்ளது.
ஆபாச வீடியோ விவகாரத்தில் தேடப்பட்டுவரும் பிரஜ்வல் ரேவண்ணா 48 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என்று ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், “தவறு செய்யாதபோது, பயப்பட தேவையில்லை. தேவேகவுடா குடும்பத்தின் கௌரவத்தை காக்கவும் எஸ்ஐடி விசாரணைக்கு ஒத்துழைக்கவும் பிரஜ்வல் நாடு திரும்ப வேண்டும். இன்னும் எத்தனை நாள்கள் இந்த திருடன் – போலீஸ் ஆட்டத்தை பார்ப்பது” என்றார்.
Sorry, no posts matched your criteria.