News May 21, 2024

பாஜகவினர் நுழைய தடை விதித்த விவசாயிகள்

image

ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ‘பாஜகவினருக்கு நுழைய தடை’ என்று அறிவிப்பு பலகைகள் தொங்கவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்றபோது, மத்திய அரசு எல்லையில் ராட்சத தடுப்புகளை அமைத்து அவர்கள் தடுத்தது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜக வேட்பாளர்களுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News May 21, 2024

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்

image

ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுவரை லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும். இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

தோஷங்கள் நீக்கும் ஆலய வழிபாடு

image

*திருச்சி – கீழப்புலிவார் சாலையில் உள்ள பூலோகநாத சுவாமி கோயிலில் நடக்கும் வாஸ்து பூஜையில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்குவதாக ஐதீகம். *திருவாரூர் அருகேயுள்ள வீரவாடி வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை, வில்வமாலை சாத்தி தயிர்சாதம் படைக்க செவ்வாய் தோஷம் நீங்கும். *காஞ்சிபுரம் திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆலய கர்ணகுண்டல ஆஞ்சநேயருக்கு தேன்குழல் மாலை சாத்தினால் கடன் தொல்லை விலகும்.

News May 21, 2024

தடம் மாறும் காங்கிரஸை அம்பலப்படுத்துகிறேன்: மோடி

image

தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தான் ஒரு வாா்த்தைகூடப் பேசவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் காங்கிரஸின் அரசியலை எதிர்த்து தான் பிரசாரம் செய்ததாகக் கூறிய அவர், நேரு & அம்பேத்கர் வகுத்த பாதையில் இருந்து தடம் மாறும் காங்கிரஸை அம்பலப்படுத்துவது தனது கடமை என்று தெரிவித்தார்.

News May 21, 2024

கோலியை வாழ்த்திய தோனி

image

RCB-க்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஏமாற்றத்தில் தோனி மைதானத்தை விட்டு வெளியேறியது தெரிந்ததே. இருப்பினும், தோனியை சந்திக்க கோலி ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “இம்முறை நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும்” என்று தோனி வாழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தோனி, விராட் நட்பை வெற்றி தோல்வி ஒருபோதும் பாதிக்காது என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

News May 21, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு ராகுல்காந்தி காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை மேற்கொள்வார் – அமித்ஷா
*தமிழர்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகாமல் திமுக அரசு பாதுகாக்க வேண்டும் – சீமான்
*எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.
*வீல்ஸ் இந்தியாவின் நிகர லாபம் 64% ஆக உயர்ந்தது.
*மே 22ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்

News May 21, 2024

லெனினின் பொன்மொழிகள்

image

✍அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும். ✍திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட ஒரு பொய் உண்மையாகிறது. ✍புரட்சிப் பாதையில் துப்பாக்கிகளை விட புத்தகங்களே மிகப்பெரிய ஆயுதங்கள். ✍உங்கள் இதயம் நெருப்பிலும், உங்கள் மூளை பனியிலும் இருக்க வேண்டும். ✍இறுதி இலக்கைத் தற்காலிக நலனுக்காகக் காவு கொடுப்பதே சந்தர்ப்பவாதம். ✍வாழ்க்கைக்காக போராடுகிறோம்; போராட்டத்தில் வாழ்கிறோம்.

News May 21, 2024

அக்காவின் அன்புக்கட்டளைக்கு அடிபணிவாரா ஸ்டாலின்?

image

மக்களவைத் தேர்தல் முடிந்ததும், குடும்பத்தோடு கொடைக்கானல் சென்ற முதல்வர் ஸ்டாலின் சில நாள்களிலேயே சென்னை திரும்பிய அனைவரும் அறிந்ததே. இன்னும் சில நாள்கள் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது குடும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையறிந்து, பெங்களூரு வந்து ஓய்வெடுத்து செல்லுமாறு, முதல்வர் ஸ்டாலினின் அக்கா செல்வி அன்புக் கட்டளையிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 21, 2024

KKR – SRH அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை

image

2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் KKR – SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் KKR 17 முறையும், SRH 9 முறையும் வென்று இருக்கின்றன. இரு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 21, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மே – 21 | வைகாசி – 08
▶கிழமை: செவ்வாய் | ▶திதி: பூரட்டாதி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: மதியம் 03:30 – 04:30 வரை
▶எமகண்டம்: காலை 09:30 – 10:30 வரை
▶குளிகை: பகல் 12:00 – 01:30 வரை
▶சூலம்: வடக்கு | ▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: திரயோதசி

error: Content is protected !!