India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், I.N.D.I.A. என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஒரே அணியாக களமிறங்கியுள்ளன. ஆனால் இக்கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் எதிரெதிராக போட்டியிடுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு முன்பு ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேசிய அரசியலில் இணைந்து செயல்படும் அக்கட்சிகள், மேற்குவங்கத்தில் 2 பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடும் நிலை காணப்படுகிறது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, எதிரணியாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் 2 அணிகளும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றன. குறிப்பாக பினராயி விஜயன், காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த முரண்பாடான அரசியலை ஏற்கெனவே கண்டதால், காங்கிரசை எதிர்த்து மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அது இம்முறை எதிரொலிக்குமா, மாறுமா என்பது தெரியவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமரசம் இல்லாத சேனாதிபதி உயிர்த்தெழ தயாராகிவிட்டார். ஜூன் மாதம் திரையங்குகளில் காண தாயாராகுங்கள் எனக் குறிப்பிட்டு வெளியான அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 33% என தரவுகள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவின் 56.5%, சீனாவின் 60.5% மற்றும் உலக சராசரியான 49%ஐ விட குறைவு. இந்தியப் பெண்களிடையே கல்வி அறிவு மேம்பட்டு இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு பல பெண்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, உத்தர பிரதேச முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். தேசிய அரசியலில் பிரமாண்ட சக்தியாகவும் திகழ்ந்தார். சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவராகவும் கருதப்பட்டார். மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள், அவரின் ஆதரவை கேட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2024 தேர்தலில், மாயாவதி தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எதனால் அவர் ஒதுங்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பாஜக ஆட்சியில் இந்தியாவும் வளர்ச்சி பெறவில்லை, மக்களும் வளர்ச்சி பெறவில்லை என்று கூறிய அவர், மக்களை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி தெரிவித்தார். மேலும் 2019, 2021 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்திக்க பாஜகவே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி, விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. பாஜக தேர்தல் அறிக்கையில் அதுகுறித்தும், வேளாண் கடன் தள்ளுபடி குறித்தும் எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
பி.வாசு இயக்கி ரஜினி நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சந்திரமுகி’ வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரஜினி பல வெற்றிப் படங்களை தந்திருந்தாலும், பேய் படங்களுக்கு பெரிய தளம் அமைத்துக் கொடுத்தது இப்படம்தான். இதன் தாக்கம் முனி, அரண்மனை என இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஆக்ஷன், ஹாரர், காமெடி, பாடல் என அனைத்து தளத்தையும் தொட்ட இப்படம் இன்றும் பேசப்படுகிறது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. கடந்தாண்டு நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் அவர் இன்று விளையாடாதது சிஎஸ்கேவுக்கு பின்னடைவாகும்.
Sorry, no posts matched your criteria.