India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கனமழைக்காக தேனி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு எந்த மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் இல்லை.
ChatGPTயின் புதிய AI தொழில்நுட்பத்துக்காக அந்நிறுவனம் தனது குரலை திருடிவிட்டதாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜான்சன் குற்றம்சாட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன் குரலைப் பயன்படுத்த அனுமதி கேட்டு ChatGPT அவரை அணுகியதாகவும், அதற்கு தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஸ்கார்லட் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், குரல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் மீது நடிகை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
புரி ஜெகந்நாதர் கோயிலில் தொலைந்து போன சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசிய மோடிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக பழித்துப் பேசுவதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்த அவர், தமிழக மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இரட்டை வேடம் போடும் மோடி, வெறுப்பு பேச்சுக்களின் மூலம் மாநிலங்களுக்கு இடையே பகையைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டினார்
தமிழரான வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்து ஒடிஷாவில் பிரதமர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கோயிலின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது மோடி சுமத்தலாமா?, தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் எனக் கூறுவது தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? என்று முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ப்ரமோஷனை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், அனிருத் இசையமைத்துள்ள “பாரா…” என்ற முதல் பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, அதற்கான ப்ரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் CSK அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃப்ளெமிங்க்-ஐ இந்திய அணிக்கு பயிற்சியாளராக்க விரும்புகிறது பிசிசிஐ. ஆனால், அப்பணிக்கு அவர் விண்ணப்பிக்கவே இல்லை. ஆகையால், அவரை விண்ணப்பிக்க வைக்க தோனியின் உதவியை பிசிசிஐ நாடுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தோனியும், ஃப்ளெமிங்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தோனியின் மூலம் அவரை அணுகவுள்ளது பிசிசிஐ.
ராகுல் சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடும் வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது X பக்கத்தில் பதிவிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என ராகுல் காந்தியைப் புகழ்ந்துள்ளார். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை என அதிமுக கூறி வந்த நிலையில், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என அதிமுக மறைமுகமாக தூது விடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 11.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார நிபுணர் ட்ரின் நுயென் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அனைத்து மக்களுக்கும் வேலைகளை உருவாக்கும் வேகம் போதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவில் சவாலாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.