News April 14, 2024

ஈரானுக்கு பதிலடி அளிக்க தயாராக உள்ளோம்

image

ஈரானுக்கு உரிய பதிலடி அளிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நிலைகள் மீது நேற்றிரவு ட்ரோன்கள், ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இது குறித்து பேசிய அவர், “எங்களுக்கு தீங்கு செய்வோருக்கு, நாங்களும் தீங்கு விளைவிப்போம் என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். தற்காப்பு மற்றும் எதிர் தாக்குதல் என எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக உள்ளோம்” என்றார்.

News April 14, 2024

தடுமாறி வரும் லக்னோ அணி

image

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டி காக் 10, கே.எல்.ராகுல் 39, ஹூடா 8, ஸ்டாய்னிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து தற்போது வரை LSG 13 ஓவர்கள் முடிவில் 99/4 ரன்கள் எடுத்துள்ளது. பொறுமையாக ஆடிவரும் பதோனி 27, பூரான் 2 ரன்கள் எடுத்துள்ளனர். KKR தரப்பில் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

News April 14, 2024

சாயாஜி ஷிண்டே உடல்நிலையில் முன்னேற்றம்

image

நடிகர் சாயாஜி ஷிண்டே நலம் பெற்று வருவதாக அப்டேட் வெளியிட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்டேட் வெளியிட்டிருக்கும் அவர், “நான் நலம் பெற்று வருகிறேன். விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

News April 14, 2024

எல்.ஐ.சி. வசம் அதானி குழுமத்தின் ₹61,210 கோடி பங்கு

image

அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி.யின் முதலீடு ஒரே ஆண்டில் 59% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத கணக்கீட்டின்படி ₹38,471 கோடியாக இருந்த முதலீடு, தற்போது ₹61,210 கோடியாக உயர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொருத்தமட்டில் ₹12,450.09 கோடியிலிருந்து ₹22,776.89 கோடியாகவும், அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தில் ₹8,495 கோடியில் இருந்து ₹14,305 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

News April 14, 2024

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம்

image

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா, ஈரானுடன் நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவாக செயல்பட தயங்கமாட்டோம் எனக் கூறியது. இதற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 14, 2024

கொரோனாவால் குறைந்த கொள்ளை சம்பவங்கள்!

image

அமெரிக்காவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கடந்தாண்டு 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எஃப்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில், 2019இல் கொரோனா காரணமாக மக்கள் வீட்டில் இருந்து பணிபுரிய தொடங்கியதால் வீடுகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் குறைய தொடங்கியுள்ளன. அதே நேரம், 2019-2022ஆம் ஆண்டு வரை கடைகள், அலுவலகங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

News April 14, 2024

லாரன்ஸ் நடிப்பில் உருவாகிறது ‘ஹண்டர்’

image

விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வெங்கட் மோகன். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஹண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

இந்த வார சண்டே சமையல் டிப்ஸ்

image

*வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.
*உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
*எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.
*பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது.

News April 14, 2024

‘ராயன்’ பட முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

image

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு விரைவில் முதல் பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் எனப் பலர் நடித்து வருகின்றனர்.

error: Content is protected !!