India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அண்ணாமலையை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருப்பாரென நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர், ஜெ., மேல் மக்களுக்கு வந்த நம்பிக்கை போல அண்ணாமலை மேல் நம்பிக்கை வந்திருப்பதாகவும், இந்தி திணிப்பு என சொல்லி ஓட்டு போடவேண்டாமென்று சொல்லும் திமுகவினரின் பிள்ளைகள் இந்தி படித்து வருவதாகவும் சாடியுள்ளார்.
ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக தீக்கிரையானது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அவருக்கு ₹30,000 பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தவெக தொண்டர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் வெற்றியடைந்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனை தாக்கிவரும் இஸ்ரேல், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஈரான் மீதும் தாக்குதல் நடத்தியது. அதற்கு எதிர்த் தாக்குதலாக இஸ்ரேல் மீது ஏவுகணை மழையை பொழிந்தது ஈரான். இந்த தாக்குதல் வெற்றி பெற்றிருப்பதாகவும், இதனை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 2 சிக்ஸர்களும் விளாசப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் (201) விட்டுக்கொடுத்த இரண்டாவது வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். சாவ்லா (211) முதல் இடத்தில் உள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 161/7 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே LSG சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. LSG அணியில் அதிகபட்சமாக பூரண் 45, கே.எல்.ராகுல் 39, பதோனி 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்னைகளை விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்க மாட்டார்கள் என்றார். மேலும், காங்கிரஸின் கரங்களை வலுப்படுத்த இளைஞர்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இரண்டு சூர்யா இடம்பெற்றிருப்பதால், படத்தில் சூர்யா இரண்டு கேரக்டரில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் எப்படி இருக்கிறது என கமெண்ட் செய்யுங்கள்.
வெயில் காலத்தில் சூடான நீரைக் கொண்டு முகம் கழுவக் கூடாது. இது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். எப்போதும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுவதுதான் நல்லது. முகம் கழுவும் போது சோப்பை நேரடியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. உள்ளங்கையில் சோப்பைத் தேய்த்து பின்னர் முகத்தில் தேய்ப்பதுதான் சரியானது.
Sorry, no posts matched your criteria.