India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-காஸா போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், தற்போது ஈரானும் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், இஸ்ரேல் வான்வழிப் பாதையை தவிர்க்கவும் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து சென்ற கார், ராஜஸ்தான் அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அப்போது காரின் கதவுகள் திறக்க முடியாததால் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். ஆத்தூர் பிரசாரத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட, நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குரல் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், விளம்பரம் தேவை என்பதற்காக, ஒற்றை செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, இந்தியாவின் வரலாறு தெரியாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி, அண்ணாமலை ஆகியோர் தங்களது சுய விளம்பரத்திற்காக எதையாவது பேசி வருவதாக குற்றம்சாட்டிய அவர், அண்ணாமலை படித்து தான் ஐபிஎஸ் அதிகாரி ஆனாரா என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய பாஜக அரசின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் துளி கூட விரும்பவில்லை என கடுமையாக சாடினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் விளையாடாத தூபே இன்று விளையாடுகிறார். இன்றைய போட்டியில் தீக்ஷனா விளையாடவில்லை. இம்பேக்ட் வீரராக பதீரனா விளையாட உள்ளார். அணி விவரம்: ரச்சின், ருதுராஜ், ரஹானே, மிச்சேல், தூபே, ரிஸ்வி, ஜடேஜா, தோனி, ஷர்துள், முஸ்தஃபிசுர், தேஷ்பாண்டே.
மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்வியுடன் சிஎஸ்கே 3 ஆவது இடத்திலும், 2 வெற்றி, 3 தோல்வியுடன் மும்பை 7 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. LSG நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய KKR 15.4 ஓவரில் 162/2 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. KKR தரப்பில் சால்ட் 89*, ஷ்ரேயஸ் ஐயர் 38* ரன்கள் எடுத்தனர். LSG தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியினால் KKR புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது.
ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 14ஆவது பெட்டி தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை மீட்க ரயில்வே ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி, நெல்லை சென்ற விரைவு ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட மூவர் கைதாகினர். இதையடுத்து அவர்களது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில், கொல்கத்தா அணி வீரர் சால்ட் அரை சதம் கடந்தார். ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் களமிறங்கிய LSG, 161/7 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக பில் சால்ட் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இதுவரை 52 ரன்கள் எடுத்துள்ளார். KKR அணி தற்போது வரை 11 ஓவர்களில் 105/2 ரன்கள் எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.