News April 14, 2024

கன்னையா குமாருக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் மற்றும் உ.பி-யில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கன்னையா குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2024

நோயாளிகளின் தகவல்களை சேகரிப்பது ஆபத்து

image

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நோயாளிகளின் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுவது ஆபத்தானது என இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை தனி மனித உரிமைக்கு எதிரானது என குற்றம்சாட்டிய IMA, இதன் மூலம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள், தனியார் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 14, 2024

சரப்ஜித் சிங் கொலை குற்றவாளி சுட்டுக்கொலை

image

பாகிஸ்தானின் லாகூரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அமீர் சர்பராஸ் தம்பா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்த இந்தியரான சரப்ஜித் சிங் 2013ஆம் ஆண்டு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் சர்பராஸ்க்கு எதிராக ஆதாரமில்லையென நீதிமன்றம், 2018இல் விடுதலை செய்திருந்தது.

News April 14, 2024

தேர்தல் பணி செய்வோரின் சம்பளம் அறிவிப்பு

image

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் சம்பள விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி, Presiding Officer – ₹1700, Polling Officer – ₹1300, Office Assistant – ₹700, Counting Supervisor – ₹850, Counting Assistant – ₹650, Micro Observer – ₹1000, Sector Magistrate – ₹1500, Asst. Zonal Officer – ₹1000, Reception Officer – ₹800, Cashier – ₹800, VAO – ₹800, Village Assistant – ₹700, Instructors – ₹800.

News April 14, 2024

ராகுல் காந்தியை மந்திரவாதி என விமர்சித்த பிரதமர் மோடி

image

காங்கிரஸ் MP ராகுல் காந்தியை மந்திரவாதி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என ராகுல் பேசியதை குறிப்பிட்ட அவர், இத்தனை நாள்களாக இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார் என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறினார். மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, நாட்டை திவால் ஆக்கிவிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

News April 14, 2024

காசி விஸ்வநாதரை தரிசித்த கீர்த்தி சனோன்!

image

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பாலிவுட் பிரபலங்கள் கீர்த்தி சனோன், ரன்வீர் சிங் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கழுத்தில் மாலை, காவித்துண்டுடன் வந்த இருவரையும் காணவும், கைக்குலுக்கவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு வெளியே அழைத்து சென்றனர். இவர்களுடன் பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணர் மணீஷ் மல்ஹோத்ராவும் கோயிலுக்கு சென்றிருந்தார்.

News April 14, 2024

2026இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்

image

2026இல் திமுக, அதிமுக இல்லாத பாமக தலைமையில் ஆட்சி அமையுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில் தமிழகம் 13 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கவலை தெரிவித்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்றால் தான் கூட்டணி என அன்புமணி கூறியுள்ளார்.

News April 14, 2024

IPL: 206 ரன்கள் விளாசிய CSK

image

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 206/4 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் 69, தூபே 66* ரன்கள் அடித்தனர். கடைசியாக களமிறங்கிய தோனி 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதையடுத்து மும்பை அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் பாண்டியா 2, கோட்சீ, ஷ்ரேயஸ் கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

News April 14, 2024

தேவையற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன

image

நோயாளிகளுக்கு தேவையற்ற அல்லது பொருத்தமற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக ICMR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 4838 மருத்துவ பரிந்துரை சீட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், 2171 (45%) மருந்து சீட்டுகள் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10% மருந்துகள் முற்றிலும் வேறானது என்றும் தெரியவந்துள்ளது. 13 முன்னணி அரசு மருத்துவமனைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News April 14, 2024

கருணாநிதியை புகழ்ந்த கமல்ஹாசன்

image

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொன்னதை செய்தவர், செய்ததை மட்டுமே சொன்னவர் என நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு தேவையான திட்டங்கள் உடனே செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

error: Content is protected !!