News April 13, 2024

திமுக – காங்., கூட்டணி வெற்றிபெறும்

image

கோவையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் நேற்றிரவு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது சாதாரண தேர்தல் அல்ல, சிந்தாந்த யுத்தம். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போரில் திமுக – காங். கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று பெருமிதம் தெரிவித்தார்.

News April 13, 2024

மோடி மீண்டும் பிரதமராவது 101% உறுதி

image

மோடி 3ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்பது 101 சதவீதம் உறுதி என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் தருமபுரியில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக அரசு நம்பர் ஒன் அரசு எனப் பெருமைப்பட்டு வருகிறது. போதையிலும், கஞ்சா விற்பனையிலும்
தான் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மக்கள் நலனில் தமிழகம் கடைசியில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

News April 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை – முதல்வர் ஸ்டாலின்
➤ மக்களவைத் தேர்தல் ஒரு சிந்தாந்த போர் – ராகுல் காந்தி
➤ தஞ்சையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புரை
➤ ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் தடுத்தது – மோடி
➤ மே 16 அன்று வெளியாகும் ‘மகாராஜா’ திரைப்படம்
➤ தமிழக வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி

News April 13, 2024

மோடியின் கல்லூரி பட்டத்தை போல் நினைக்காதீர்கள்

image

சிவசேனா கட்சி மோடியின் கல்லூரி பட்டத்தை போல போலி அல்ல என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது. பரப்புரைக்காக மும்பை வந்த பிரதமர், உத்தவ் அணியின் சிவசேனாவை போலி என விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள உத்தவ் தாக்கரே, யார் போலி என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தெரிய வரும் என்று பதிலளித்துள்ளார்..

News April 13, 2024

ஹர்திக் பாண்டியா நடவடிக்கை மர்மமாக உள்ளது

image

தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மறைப்பதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டூல் குற்றம் சாட்டியுள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் முதல் ஓவரை வீசி தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹர்திக் தற்போது அதிகம் பவுலிங் செய்வதில்லை. அவர் உடல்நலன் சரியான முறையில் இல்லை என்று கூறிய சைமன் டூல், பாண்டியாவின் நடவடிக்கைகளில் அது வெளிப்படையாக தெரிவதாகவும் கூறினார்.

News April 13, 2024

எதற்காக இந்த ஓரவஞ்சனை?

image

தமிழகத்தின் வரி பணத்தை, வட மாநிலங்களுக்கு மோடி தருவதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்கள் ரூ.1 வரியாக செலுத்தினால் திருப்பி பல மடங்காக அவர்களுக்கு கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டுக்கு மட்டும் வெறும் 29 பைசா தருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜகவின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழக மக்கள் தக்க பாடம் வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

News April 13, 2024

உடலுக்கு அத்தியாவசியமான காலை உணவு

image

இரவு உணவுக்குப் பிறகு காலை வரை வயிறு வெறுமையாக இருப்பதால், வயிற்றுக்குள் ஆசிட் சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். சரிவர சாப்பிடாமல் விட்டால், அது அல்சர் பிரச்னையை உருவாக்கும். 40 வயதுக்கு மேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. மேலும், சூடான உணவை சாப்பிட்ட நொடியே, குளிர்ச்சியான உணவுக்கு மாறினால் பல் பாதிப்பும் ஏற்படும்.

News April 13, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் – 13 | பங்குனி – 31
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM,
4:30 PM – 5:30 PM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 AM,
9:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:30 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶ திதி – பஞ்சமி

News April 13, 2024

சத்தமே இல்லாமல் சாதித்த ரிஷப் பந்த்

image

டெல்லி அணிக்காக 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 9 ரன்களை கடந்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2,570 ரன்களை எடுத்து இப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் 2,382, சேவாக் 2,375 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News April 13, 2024

இந்தியாவுக்கு மோடி தேவையில்லை

image

இந்தியாவுக்கு இனிமேல் மோடி வேண்டாம் என கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். தருமபுரி திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் தருகின்ற வரியை மத்திய அரசு முழுமையாக திருப்பித் தருவதில்லை. ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டுமே அவர்கள் திருப்பித் தரும் போதும் தமிழக முதல்வர் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், பாஜகவை வீழ்த்துவதே நமது இலக்கு என்றும் கூறினார்.

error: Content is protected !!