India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் மோசமாக விளையாடியதை வைத்து, உலக கோப்பை போட்டியில் பாண்டியாவின் விளையாட்டுத் திறனை குறைத்து மதிப்பிடக் கூடாதென்று கூறிய யுவராஜ் சிங், ரோஹித், ஜெய்ஸ்வால் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகவும், கோலி 3ஆவது வீரராகவும் களமிறங்க வேண்டுமென்று யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்ட போதே, அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் எனப் பேசப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு விளையாட்டுத் துறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ள ஸ்டாலின், அப்போது உதயநிதியை துணை முதல்வராக்க தீர்மானித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) ஆர். மகாதேவனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். தலைமை நீதிபதியாக இருக்கும் கங்காபுர்வாலா நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அந்த பதவிக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவனை நியமித்து முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என்றும் முர்மு கூறியுள்ளார்.
நேபாள மலையேற்ற வீரர் காமி ரிதா (54) கடந்த 12ஆம் தேதி, கடல் மட்டத்தில் இருந்து 8,800 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் மலை மீது 29ஆவது முறையாக ஏறி சாதனை படைத்திருந்தார். தற்போது 9 நாள்கள் கழிந்த நிலையில், இன்று காலை 7:49 மணிக்கு மீண்டும் 30ஆவது முறையாக ஏறி, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் தொடர்ந்து மலையேறி வருகிறார்.
புரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என மறைமுகமாக தமிழரான வி.கே.பாண்டியனை திருடர் என்ற ரீதியில் பிரதமர் மோடி விமர்சித்தது சர்ச்சையானது. இந்நிலையில், அளவற்ற அறிவாற்றலைப் பெற்றுள்ள பிரதமர், தொலைந்துபோன சாவிகளைக் கண்டுபிடித்து கொடுத்து, ஒடிஷா மக்களின் வாழ்வு ஒளிமயமாக உதவ வேண்டும் என வி.கே.பாண்டியன் பதிலடி கொடுத்தார்.
இன்று காய்கறிகளின் விலை சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று ₹400க்கு விற்பனையான கிலோ பூண்டு இன்று ₹340ஆகவும், பீன்ஸ் ₹300லிருந்து ₹240ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல், இஞ்சி ₹220, மிளகாய் ₹100, கேரட் ₹90, உருளைக்கிழங்கு ₹80, பீட்ரூட் ₹78, சின்ன வெங்காயம் ₹80, பெரிய வெங்காயம் ₹58, கத்தரிக்காய் ₹75, முட்டைகோஸ் ₹50, முருங்கைக்காய் ₹80, தக்காளி ₹48-க்கு விற்பனையாகிறது.
ஒடிஷாவைச் சேராதவர் என மோடி விமர்சிக்கும் நிலையில், அதற்கு வி.கே. பாண்டியன், தமது மனைவி ஒடிஷாக்காரர், தானொரு இந்தியன், எனது பிள்ளைகளின் தாய்மொழி ஒடியா, எனது கர்மபூமி ஒடிஷா என பதிலடி கொடுத்துள்ளார். நவீன் பட்நாயக் போலவே தோற்றத்திலும் எளிமை காட்டுகிறார். ஒடிஷா அரசியலில் நவீன் பட்நாயக் போல் ஆதிக்கமிக்கவராகத் தலையெடுப்பாரா வி.கே. பாண்டியன் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தளம் கட்சிக்கு யார் தலைமை வகிப்பார்கள் என்ற கேள்வி நிலவுகிறது. அந்த இடத்தை வி.கே. பாண்டியன் நிரப்பக்கூடும் என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஒருவேளை வி.கே. பாண்டியன் நவீனின் அரசியல் வாரிசாகக் களமிறங்கினால் பாஜக எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்று கருதுவதால் அவரை ஒடிஷா அல்லாதவர் என மோடி விமர்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன், தமிழகத்தை சேர்ந்தவர். இந்த பின்னணியை வைத்து மோடி அண்மையில் பாண்டியனை விமர்சித்து பேசினார். அதேபோல் அவரை ராகுலும் விமர்சித்து இருந்தார். கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சு நடத்த டெல்லிக்கு பாண்டியனையே நவீன் அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால், தேர்தலில் சரியாக பணி செய்யாதவர்களின் பட்டியலை திமுக தலைமை தயார் செய்துள்ளதாகவும், 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.