India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்க்கட்சி என்ற தகுதியை பெற மக்களவையில் 10% உறுப்பினர்களை ஒருகட்சி பெற வேண்டும். அந்த வகையில் 543 எம்பிக்களில் குறைந்தபட்சம் 55 எம்பிக்கள் இருக்கும் கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 10 வருடங்களாக அந்த வாய்ப்பு காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 2014இல் 44 எம்பிக்களும், 2019இல் 52 எம்பிக்கள் மட்டுமே வென்றதால், காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்னையில் பிராய்லர் கோழி விலை இதுவரை இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்து வருகிறது. கோடை வெயில் காரணமாக நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் கோழி உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. கடந்த வாரம் 1 கிலோ ₹240க்கு விற்பனையான பிராய்லர் கோழி, தற்போது கிலோ ₹380 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அசைவப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பது ஒரு முழுமையான கற்பனை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பாஜகவின் கோட்டை என்று கூறப்படும் தொகுதிகளில் எல்லாம் வாக்குப்பதிவு சரிவை கண்டிருப்பதாக கூறிய அவர், காங்கிரஸ் மற்றும் INDIA கூட்டணி வலுவாக உள்ள இடங்களில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 2019இல் அடைந்த வெற்றியை பாஜக மீண்டும் பெறவே முடியாது என்றும் தெரிவித்தார்.
வேளாங்கண்ணியில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் வழியே சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் சேவை நேரம் மாற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி 25, 27, ஜுன் 1,3,8, 10,15,17 தேதிகளில் இரவு 7.10 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு, எழும்பூருக்கு மறுநாள் காலை 3.20 மணி ரயில் சென்றடையும்.
தோல்வியில் இருந்து மீண்டு ஹைதரபாத் அணி இறுதிப்போட்டிக்கு நிச்சயம் செல்லும் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் எல்லா அணிகளுக்குமே ஏதாவது ஒருநாள் மோசமான நாளாக அமையும் என்ற அவர், கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங்கில் தடுமாறுவோம் என எதிர்பார்க்கவில்லை என்றார். KKR அணிக்கு எதிரான நேற்றைய குவாலிபையர்-1 போட்டியில் SRH தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பு பணி காரணமாக, திருப்பதி- கோவை விரைவு ரயில், 27,29,30 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை- திருப்பதி விரைவு ரயில், 28, 30 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும், திருப்பதி-விழுப்புரம், விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில்களும் 27,30 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள சூழலில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், விருதுநகர், பெரம்பலூர், தென்காசி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்புகள் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து, தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 மடங்கு அதிக விலைக்கு விற்று அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், ஜூன் 4க்குப் பின் அமையும் INDIA கூட்டணி இந்த ஊழலை விசாரிக்கும் எனத் தெரிவித்தார்.
RCB மற்றும் விராட் கோலியை ஏலத்தில் எடுத்ததைவிட சிறந்த தேர்வு எதுவுமில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், அந்த 2 தேர்வுகளும் சரியானது தான் என தன்னுடைய உள்ளுணர்வு கூறியதாகவும், அதேபோல் தற்போதும், 2024 IPL கோப்பையை RCB அணி வெல்லும் என தன்னுடைய உள்ளுணர்வில் தோன்றுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், RCB அணி முன்னோக்கிச் செல்ல பெஸ்ட் ஆஃப் லக் எனக் கூறியுள்ளார்.
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் ‘தாயுமானவர் திட்டம்’ தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.