News May 22, 2024

E-KYCக்கு மே 30 வரை கெடு?

image

சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய E-KYC கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மே 30-க்குள் E-KYC அப்டேட் செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், கேஸ் ஏஜென்சிகள் தனித்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

News May 22, 2024

நாளை முதல் தொட்டபெட்டா செல்லலாம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நாளை முதல் அனுமதி வழங்கப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல கடந்த ஒரு வாரமாக வனத்துறை தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் நாளை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 22, 2024

போலீசார் துன்புறுத்தவில்லை: சவுக்கு சங்கர்

image

யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் ஜூன் 5 வரை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலரை இழிவாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதியிடம் போலீசார் தன்னை துன்புறுத்தவில்லை என அவர் கூறியுள்ளார்.

News May 22, 2024

வாட்ஸ்அப்பில் வந்தது புது அப்டேட்

image

மெட்டா நிறுவனம் தனது பயனாளர்களின் வசதிக்காக, வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது, டெலிட்டான மெசேஜை மீண்டும் வரவழைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me எனக் கொடுத்துவிட்டால் அந்த மெசேஜை UNDO செய்து மீண்டும் வரவழைக்கலாம். உங்க வாட்ஸ்அப்-ஐ அப்டேட் செய்துவிட்டீர்களா?

News May 22, 2024

செல்லூர் ராஜு கருத்தை ஏற்கவில்லை: அதிமுக எம்எல்ஏ

image

ராகுலை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக அவர் ராகுலை பாராட்டியதாக கருதவில்லை என்ற அவர், ராகுலை பற்றி அவர் கூறிய எதையும் ஏற்கவில்லை என்றார். முன்னதாக நேற்று ராகுலை பாராட்டி வீடியோ ஒன்றை X பக்கத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டு இருந்தார். அதிமுக தரப்பில் எழுந்த விமர்சனங்கள் காரணமாக அதை தற்போது நீக்கியுள்ளார்.

News May 22, 2024

‘வடக்கன்’ படத்தின் டைட்டில் மாற்றம்

image

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ திரைப்படம் மே24 ஆம் தேதி வெளியாக இருந்தது. இதனிடையே, படத்தின் தலைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், அதனை மாற்றினால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் தர முடியும் என நிபந்தனை விதித்தனர். இதனால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் டைட்டில் ‘ரயில்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News May 22, 2024

பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது

image

5ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக தலைவர் நட்டாவுக்கும், காங்., தலைவர் கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் சாதி, மத ரீதியாகவும், பிரிவினை ஏற்படுத்தும் விதமாக பரப்புரை செய்யக் கூடாது என்றும், அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என்ற வகையில் காங்கிரஸ் பரப்புரை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 22, 2024

கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

image

RCB – RR அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் சுற்று இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, RCB-யின் பயிற்சி ஆட்டமும், செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நேற்று அகமதாபாத்தில் 4 பயங்கரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

News May 22, 2024

முதல்வரின் திசைதிருப்பும் நோக்கம் நிறைவேறாது

image

பிரதமரின் பேச்சை திசை திருப்ப முயலும் முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் உள்ள பிரச்னைகளை பிரதமர் பேசுவது எப்படி தமிழகத்தை அவமதிப்பது ஆகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக ஒடிஷாவில் பேசிய பிரதமர், பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருப்பதாக கூறியிருந்தார். மோடியின் பேச்சுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

News May 22, 2024

தொடர் வெற்றி தான் எங்களின் இலக்கு: வெங்கடேஷ் ஐயர்

image

பெங்களூரு அணியை போன்று தொடர்ச்சியான வெற்றியை பெற விரும்புவதாக கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகுந்த நம்பிக்கையுடன் களத்திற்கு சென்று விளையாடி வெற்றிபெற்றோம். இதற்கு பவுலர்களின் பங்களிப்பு மிக அபாரமானது என்றார்.
ஹைதராபாத் நேற்றைய குவாலிஃபயர்-1 போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 51 ரன்கள் குவித்து, கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

error: Content is protected !!