India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அந்தப் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான பெலிக்ஸுக்கு, தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் ஜாமின் கிடைத்தும், பெலிக்ஸால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் 2வது பாடல் மே 24இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு, A.R ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 2வது பாடல் குறித்த அறிவிப்பில், கிஷன், அபர்ணா சைக்கிளில் செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மாற்றத்துக்கான அலை வீசுவதாக தெரிவித்த அவர், அது குஜராத்திலும் மிகப் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற தேர்தல்களில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. முன்னதாக, டெல்லியில் கடந்த 1ம் தேதி 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நில மோசடி வழக்கில் அவர் ஜனவரி 31இல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றத்துக்கான அடிப்படை ஆதாரம் ஹேமந்த் சோரன் வழக்கில் இருப்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகரும், KKR அணி உரிமையாளருமான ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. IPL குவாலிஃபயர் 1இல் நேற்று KKR-SRH அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த போட்டியை ஷாருக்கான் நேரில் கண்டு ரசித்தார். அப்போது, வெப்பம் காரணமாக அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு டிஜ்சார்ஜ் ஆனார்.
ஆர்.சி.பி அணியின் பயிற்சி ஆட்டம் ரத்தானதற்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்துள்ளது. 2ஆவது எலிமினேட்டர் போட்டிக்கு பெங்களூர் அணி தயாராகி வரும் நிலையில், கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், இன்றைய பயிற்சி ஆட்டம் நிறுத்தப்பட்டதாக மே.வங்க நாளிதழில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள நிர்வாகிகள், வீரர்கள் வெப்பத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினர்.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரத்துக்காக செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்கலாமே? என்ற நீதிபதிகள் வழக்கை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்ற RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் சம பலத்துடன் உள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடைபெற உள்ள குவாலிஃபயர்-2 போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும்.
மகாராஷ்டிராவில் மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான சிறுவன், 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என அம்மாநில போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விபத்து நடந்த 15 மணி நேரத்தில் அச்சிறுவன் ஜாமின் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.