India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜன்தன் வங்கிக் கணக்குகளை மூடும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 50 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு தனது ஆட்சியில் வங்கிக் கணக்கு தொடங்கியதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் அதனை முடக்கி அதிலிருக்கும் பணத்தை பறித்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்தார். மேலும், கிராமங்களில் உள்ள மின்சார இணைப்பையும் எதிர்க்கட்சிகள் துண்டித்து விடுவார்கள் என குற்றம்சாட்டினார்.
நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, என்னை இந்த பூமிக்கு அனுப்பியது கடவுள் தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்தவகையில், திமுக எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் பதிவில், கடவுள் இல்லவே இல்லை என்று பெரியார் ஏன் சொன்னார் என்று இப்போது தான் பலருக்கும் புரிவதாக விமர்சித்துள்ளார். மேலும், வாழ்க மோடி எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி. அகமதாபாத் மைதானத்தில் முதலில் விளையாடிய RCB, 172/8 ரன்கள் எடுத்தது. கோலி 33, டூபிளெஸிஸ் 17, கிரீன் 27, படிதர் 34, மேக்ஸ்வெல் 0, மஹிபால் 32, தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் எடுத்தனர். RR தரப்பில் அதிகபட்சமாக, ஆவேஷ் கான் 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
ஜூன் மாதத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், பள்ளிகள் திறந்ததும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், பாடப்புத்தகம், மிதிவண்டி, சீருடைகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனையை தொடர்ந்து, பள்ளி திறப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
கொடைக்கானல் குணா குகையை கதைக்களமாக கொண்டு வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்து ஹிட் ஆன ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு அந்த பாடலும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இதனிடையே அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதை எதிர்த்து இளையராஜா தயாரிப்பு தரப்புக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. அகமதாபாத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய RCB வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கோலி 33, டூபிளெஸிஸ் 17, கிரீன் 27, படிதர் 34 ரன்களில் அவுட்டாகினர். RR அணியில் அஸ்வின் 2, சாஹல், போல்ட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். RCB தற்போது வரை 16 ஓவர்களில் 134/5 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார். இவ்விவகாரத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளதாக கூறிய அவர், இரண்டையும் போலீசார் நியாயமாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு, சம்பவம் நடந்த போது தான் அங்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மே.வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சட்டம் 2012-க்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும், பாஜக அரசின் திட்டமிட்ட சதி எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை RCB வீரர் விராட் கோலி படைத்துள்ளார். 2024 IPL சீசனில் இன்று RR-RCB அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் 29 ரன்களை எடுத்ததன் மூலம், 8000 ரன்களை கடந்து கோலி சாதித்துள்ளார். முன்னதாக, நடப்பு IPL சீசனில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கோப்பையையும், கோலி தனது வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அந்தப் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான பெலிக்ஸுக்கு, தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் ஜாமின் கிடைத்தும், பெலிக்ஸால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.