News May 23, 2024

அஜீரண பிரச்னையா… அப்போ இதை குடிங்க!

image

கோடைக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் பசியின்மை, பொருமல், அஜீரணம், பிரச்னைகளுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கும். இந்நோய்களில் இருந்து விடுபட மஞ்சள் சாறு பருகலாம். பசும்மஞ்சள், சீரகம், மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், பனைவெல்லம் ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்தால் சாறு தயார். இதனை காலை – மாலை இருவேளை குடித்தால் மிகச் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

News May 23, 2024

தூதர்களை திரும்ப பெறும் இஸ்ரேல்!

image

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ள அயர்லாந்து & நார்வே ஆகிய இருநாடுகளில் இருந்து தனது தூதர்களை திரும்ப பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், “இஸ்ரேலின் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் நாங்கள் ஏற்க மாட்டோம். இது ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல்” எனக் கூறியுள்ளார்.

News May 23, 2024

முரண்கள் இருந்தாலும் ஒற்றுமையாக பயணிக்கிறோம்

image

தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை சிறப்பாகச் செயல்படுவதாக
கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “எங்களுக்குள் எந்த வெறுப்புணர்வும் இல்லை. நான் அரசியலிலிருந்து என்றுமே விலகியிருக்க மாட்டேன். அவர் இளையவர் என்பதால், வழிவிட்டு நிற்கிறேன். கருத்து முரண்கள் இருந்தாலும், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகத்தான் பயணிக்கிறோம்” எனக் கூறினார்.

News May 23, 2024

மே 23 வரலாற்றில் இன்று!

image

➤1430 – கோம்பைன் கலகத்திற்கு உதவிய ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். ➤1844 – பாரசீக தேசத்தில் பாப் பாபிசம் என்ற மதக்கொள்கையை முகம்மத் ஷிராஸி வெளியிட்டார். ➤ 1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளிவந்தது. ➤1981 – உடுமலை நாராயணகவி மறைந்த நாள். ➤1949 – மேற்கு ஜெர்மன் என்ற நாடு உருவாக்கப்பட்டது. ➤1993 – ஐ.நா. அவையில் எரித்திரியா இணைந்தது.

News May 23, 2024

ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை அளிப்பேன்: யுவராஜ் சிங்

image

டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தரக்கூடிய அபரிமிதமான திறமை ரிஷப் பண்ட்டிடம் இருப்பதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், நான் தேர்வுக்குழுவில் இருந்தால், விக்கெட் கீப்பர் இடத்திற்கு சாம்சனை விட ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை அளிப்பேன். சாம்சனும் சூப்பர் பார்மில் உள்ளார். தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் விளையாடுவார் என்றார்.

News May 23, 2024

விஜய் சேதுபதி ஒரு சிறந்த மனிதர்: ராம் கோபால் வர்மா

image

நடிகர் விஜய் சேதுபதி திரையில் பார்ப்பதைவிடவும் நேரில் சிறந்த மனிதராக இருக்கிறார் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “விஜய் சேதுபதியை பல முறை திரையில் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போதுதான் முதல்முறையாக அவரை நேரில் சந்தித்தேன். அவருடன் பேசியபோது, கேமராவுக்கு முன்னாடி மட்டுமே நடிக்க தெரிகிறது. நிஜத்தில் நடிக்கத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

News May 23, 2024

சுற்றுச்சூழல் மாற்றங்களால் நோய் பரவல் அதிகரிப்பு

image

காலநிலை & சுற்றுச்சூழல் மாற்றத்தால் மனிதர்களிடையே புதிய நோய் பரவல் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நோட்ரே பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில், ஆசிய புலி கொசு அங்கிருந்து ஐரோப்பாவிற்கு வந்து டெங்கு & சிக்குன்குனியா போன்ற நோய்களை கொண்டு வந்துள்ளது. விரைவான நகரமயமாக்கலின் வேகம், புதிய நோய்களைப் பரப்பும் கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் உருவாக்குகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 23, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 11
▶குறள்:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
▶பொருள்:
உரிய காலத்தில் மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உயிர்கள் நிலைபெற்று வாழ்ந்து வருகின்றன. ஆதலால், மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும்.

News May 23, 2024

₹2.11 லட்சம் கோடியை அரசுக்கு அளித்த ஆர்.பி.ஐ.,

image

2023-24 நிதியாண்டில் இந்திய அரசுக்கு ₹2.11 லட்சம் கோடியை ஈவுத்தொகையாக வழங்க ஆர்.பி.ஐ., ஒப்புதல் அளித்துள்ளது. மும்பையில் நடந்த ஆர்.பி.ஐ.,மத்திய இயக்குநர்கள் குழுவின் 608ஆவது கூட்டத்தில், இருப்பு நிலைக் குறிப்பில் 5.5% வரம்பிற்குள் CRBஇன் கீழ் இடர் ஒதுக்கீடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆர்.பி.ஐ., அரசின் கருவூலத்திற்கு ₹87,400 கோடி வழங்கியது கவனிக்கத்தக்கது.

News May 23, 2024

RR அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய போவெல்

image

RCB-க்கு எதிரான போட்டியில், 4 முக்கியமான கேட்சுகளை பிடித்த ரோவ்மன் போவெல் கடைசி நேர பரபரப்பில் 16 ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்து RR அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். RR அணியின் வெற்றி குறித்து பேசிய அவர், “கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்ய விடாத அளவுக்கு RCB எந்த கஷ்டத்தையும் கொடுக்கவில்லை. பிளேஸிஸ் கொடுத்த கேட்ச்சை பிடிக்காமல் போயிருந்தால் வெற்றி வாய்ப்பு பறிபோயிருக்கலாம்” என்றார்.

error: Content is protected !!