News May 23, 2024

ஒரே நாளில் ₹880 குறைந்த ஆபரணத் தங்கம் விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹880 குறைந்ததால் நகைப் பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 குறைந்து ₹54,000க்கும், கிராமுக்கு ₹110 குறைந்து ₹6,750க்கும் விற்பனையாகிறது. மே 14ஆம் தேதி ₹53,520ஆக இருந்த தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ₹55 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது மீண்டும் விலை குறையத் தொடங்கியிருக்கிறது.

News May 23, 2024

APPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளன. எழுத்துத் தேர்வு செப்.1ஆம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஜூன் மாதமும், பயிற்சி 2025 ஜூலை 2ஆம் தேதியும் தொடங்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 4ஆம் தேதிக்குள் <>upsc.gov.in<<>> என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News May 23, 2024

ஜெயம் ரவிக்கு வில்லனாகும் அபிஷேக் பச்சன்?

image

மோகன் ராஜா இயக்கவுள்ள ‘தனி ஒருவன் 2’ படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், ஜெயம் ரவிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தது, நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல, இப்படத்தில் அபிஷேக் பச்சனின் கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 23, 2024

IPL: குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக வெற்றி

image

ஐபிஎல் 2008 முதல் நடைபெற்று வருகிறது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2022 ஆண்டு முதல் சேர்க்கப்பட்டு விளையாடி வருகிறது. இதுவரை 45 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத், 28இல் வெற்றி, 17இல் தோல்வி அடைந்துள்ளது. அதாவது அந்த அணியின் வெற்றி சதவீதம் 62.22% ஆகும். இது வேறு எந்த அணியை விடவும் அதிகம். அறிமுகமான 2022ஆம் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத், 2023இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

News May 23, 2024

மிக கனமழை பெய்யும்

image

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தேனி, திருப்பூர், கோவையில் மிக கனமழையும், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தஞ்சை, நாகை, சேலம், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். எனவே, மழையின்போது அறுந்து கிடக்கும் மின் கம்பி அருகே செல்ல வேண்டாம். மின் கம்பத்தில் கால்நடைகளைக் கட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 23, 2024

ஒரு தொகுதியில் ஒரே குடும்பம் போட்டி

image

ஹரியானாவில் ஒரு மக்களவைத் தொகுதியை கைப்பற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன் ரஞ்சித்சிங் சவுதாலா (பாஜக), பேரனின் மனைவி நைனா சவுதாலா (ஜனநாயக ஜனதா கட்சி), மற்றொரு பேரனின் மனைவி சுனைனா (இந்திய தேசிய லோக் தளம்) ஆகியோர் சிசார் தொகுதியில் களமிறங்கியுள்ளனர். இதில் அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

News May 23, 2024

பிரியங்கா அணிந்த வைரஸ் நெக்லஸ் மதிப்பு ₹358 கோடியா?

image

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற காலா டின்னர் நிகழ்ச்சியில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவர், 140 கேரட் வைரங்களால் வடிவமைக்கப்பட்ட செர்பன்டி அட்டிர்னா நெக்லஸ் அணிந்திருந்தார். அதன் மதிப்பு, 43 மில்லியன் டாலர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ₹358 கோடி எனக் கூறப்படுகிறது. அதனை வடிவமைக்க 2,800 மணி நேரம் (சுமார் 116 நாள்கள்) ஆனதாக சொல்லப்படுகிறது.

News May 23, 2024

CSK-வை வீழ்த்தினால் மட்டும் போதாது

image

RR-க்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் RCB அணி தோல்வி அடைந்தது குறித்து முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார். நேரலையில் பேசிய அவர், கொண்டாட்டங்களினாலும், ஆக்ரோஷத்தினாலும் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை என்றும், அதற்கு CSK அணியை மட்டும் வீழ்த்தினால் போதாது என்றும் தெரிவித்தார். மேலும், ப்ளே-ஆஃப் சுற்றுகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும் எனக் குறிப்பிட்டார்.

News May 23, 2024

NET Exam: திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

image

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பப் பதிவில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாளாகும். நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி அவகாசம் முடிந்த நிலையில் திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே, இதுவரை திருத்தம் செய்யாதவர்கள், கால தாமதமின்றி உடனே திருத்தம் செய்யவும். நெட் தேர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 23, 2024

உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

டெல்லி நார்த் பிளாக் பகுதியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. தகவலின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 1ஆம் தேதி 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்து ஹங்கேரியில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அதனுடன் இதற்கு தொடர்புண்டா என விசாரணை நடக்கிறது.

error: Content is protected !!