India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைனுடனான போரின் தீவிரம் மேலும் அதிகரித்தால், அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகப் போரின் ஆரம்பம் முதல் பேசப்பட்டு வருகிறது. தற்போது அணுஆயுதத் தாக்குதலுக்கான ஒத்திகை நடப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் அணுஆயுதத் தாக்குதலுக்கு உள்ளானால், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதோடு, கதிர்வீச்சின் வீரியத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு எதிர்கால சந்ததியினர் ஊனத்தோடு பிறக்கும் நிலை உருவாகும்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தீவிரப் புயலாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு “REMAL” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மை துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 24.50 லட்சம் விவசாயிகளுக்கு ₹4,366 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை, மழை வறட்சி பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் விவசாயிகளுக்கு ₹582 கோடி நிவாரணம், கரும்பு விவசாயிகளுக்கு ₹651 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
ஓபிசி சான்றிதழ் தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த மம்தா, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதேநேரத்தில் ஓபிசி இடஒதுக்கீடு தொடரும் என்றும் கூறியுள்ளார்.
RR-க்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக், தோல்வி குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “தொடர்ந்து 6 போட்டிகளில் வென்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அதனால், இந்த வருடம் எங்களுக்கானது என்று நினைத்தோம். ஆனால், விளையாட்டைப் பொறுத்தவரை எல்லா போட்டிகளிலும் சரியான முடிவுகளை பெற முடியாது. சில கடினமான நாள்கள் இருக்கும். இது எங்களுக்கு கடினமான நாளாகிவிட்டது” எனக் கூறினார்.
தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குஜராத்தில் தாக்குதல் நடத்தவும், பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்த நிலையில், கொலை மிரட்டல் வந்துள்ளது.
RR-க்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வென்றிருக்கலாம் என RCB கேப்டன் டு பிளசி கூறியுள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், தங்கள் வீரர்கள் உண்மையிலேயே கடினமாகப் போராடியதாகவும், பனி மற்றும் இம்பேக்ட் வீரர் விதி இருப்பதால் எதிரணிக்கு இந்த ஸ்கோர் போதாது என்றும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து 6 போட்டிகளில் வென்றது மிகவும் பெருமையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் மோடிக்கு இந்தியில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். அந்த அழைப்பு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேசத்துக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பெல்ஜியத்தில் நடைபெற்ற FIH ப்ரோ லீக் போட்டியில், இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இப்போட்டியில், இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. லலித் மந்தீப் தலா 1 கோல் அடித்தனர். ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
லியோ, டாடா உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றிய விஷ்ணு எடவன், நடிகர் கவினை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், கவினுக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்திற்கு பிறகு, இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.