News May 23, 2024

பாஜக நினைத்ததற்கு நேர் மாறாக நடந்தது: கெஜ்ரிவால்

image

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தன்னை கைது செய்தது பாஜகவுக்கு பின்னடைவை அளித்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். PTI செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது கைதுக்கு பின், ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம் பாதிக்கப்படும், கட்சி சீர்குலையும், ஆட்சி கவிழும் என பாஜக நினைத்ததாகவும், ஆனால், அதற்கு நேர் மாறாக கட்சி பலமடைந்து, தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

News May 23, 2024

22 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், சில பகுதிகளில் வழுக்கும் சூழலும் உருவாகக் கூடும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை இல்லாத சில கட்டடங்களில் லேசான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

News May 23, 2024

முதல்வரை சந்திக்கும் கூகுள் நிறுவன அதிகாரிகள்

image

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர். மாநிலத்தில் முதல் முறையாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்காக, அவர்கள் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொழிற்சாலை அமைந்தால் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

News May 23, 2024

ப்ளே-ஆஃப் சுற்றில் அஷ்வின் படைத்த சாதனை

image

ப்ளே-ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 2ஆவது வீரர் எனும் பெருமையை அஷ்வின் (21 விக்கெட்) பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியில், 2 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ப்ளே-ஆஃப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ (28) முதலிடத்திலும், மோகித் சர்மா (20) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

News May 23, 2024

கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்

image

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் கேரளாவின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 23, 2024

மே 31க்குள் பாட புத்தகங்களை அனுப்ப உத்தரவு

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மே 31-க்குள் பாட புத்தகங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளன்று பாட புத்தகங்கள் & நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 4-க்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 23, 2024

காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெல்லாது: அமித் ஷா

image

நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில் பாஜக பெரும்பான்மையை கடந்துவிட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் கபிர் நகரில் பிரசாரம் செய்த அவர், பாஜக இதுவரை 310 தொகுதிகளில் வெற்றி பெற்று 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகர்வதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது என்றும் கூறினார். மேலும், சமாஜ்வாதி கட்சி 4 தொகுதிகளில் கூட வெல்லாது எனவும் தெரிவித்தார்.

News May 23, 2024

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

image

புத்தகங்களை படிக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே அறிவுத் திறனும், கற்பனை ஆற்றலும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. இதனால், அவர்களால் பள்ளிப் பாடங்களையும் எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும். குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்திவிட்டால், வளர வளர படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல சிந்தனைகளை அவர்களது மனங்களில் விதைக்கும்.

News May 23, 2024

ஷேன் வார்னே சாதனையை சமன் செய்த சஞ்சு சாம்சன்

image

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வீரர்கள் வரிசையில் ஷேன் வார்னேவின் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். ஷேன் வார்னே 31 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்திருந்த நிலையில், நேற்றைய பெங்களூருவுக்கு எதிரான வெற்றியின் மூலம் சஞ்சு சாம்சன் அதை சமன் செய்துள்ளார். முன்னதாக, ராகுல் டிராவிட் 18 வெற்றிகளை பெற்று இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.

News May 23, 2024

மாட்டிறைச்சி தான் பிடிக்கும்; அண்ணாமலைக்கு EVKS பதிலடி

image

கமலாலயத்தில் மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை தயார் செய்து வைக்குமாறு அண்ணாமலைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். தங்களுக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும் என்ற அவர், கமலாலயம் வரும் தேதியை 2 நாள்களுக்கு முன் அறிவிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாஜக அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட வந்தால், வரும் 10 பேருக்கு உணவு அளிப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

error: Content is protected !!